தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக் கழக பட்டமளிப்பு விழாவில், அவர் நேற்று பேசியதாவது: முதன் முறையாக பணியாளர் தேர்வாணையம்....மூலம், 2012-13ம் ஆண்டில் நடக்கும் தேர்வுகள் பற்றிய அறிவிப்பை ஆண்டு துவக்கத்திலேயே வெளியிட்டோம். இதில், 33 பதவிகளுக்கு, 17,952 பேர் தேர்வு செய்யப்படுவர் என, கூறினோம். கடந்த ஓராண்டில், தமிழக அரசு துறையில் உள்ள, 57 பதவிகளுக்கு, 25,453 பேர் தேர்வு செய்யப்பட்டனர். முதல் முறையாக, தமிழ்நாடு பணியாளர் தேர்வாணையம் மூலம் தேர்வு எழுத தகுதியானோர், ஆன்-லைனில் பதிவு செய்யும் முறையை கொண்டு வந்தோம். இதில், 19.20 லட்சம் பேர் பதிவு செய்தனர். இவர்கள், அடுத்த ஐந்தாண்டுகளுக்கு நடத்தப்படும் தேர்வுகளுக்குத் தகுதியானவர்கள். ஒவ்வொரு முறையும், விண்ணப்பிக்க வேண்டிய அவசியமில்லை. தமிழ்நாடு பணியாளர் தேர்வாணையம் நடத்திய நேர்காணல் உள்ளிட்ட, ஒவ்வொரு தேர்வு நிலைகளும் வீடியோவில் பதிவு செய்து, வெளிப்படைத்தன்மையை உறுதி செய்தோம். தேர்வு முறைகள் அனைத்தும், கணினிமயமாக்கப்பட்டுள்ளன. தேர்வு விடைத்தாள் வெளியிடப்பட்டு, ஆட்சேபனை பெறப்படுகிறது. பாடத்திட்டங்கள் ஒவ்வொரு முறையும், தரம் உயர்த்தப்படுகின்றன. தேர்வு முறைகளும் மேம்படுத்தப்படுகின்றன. இவ்வாறு நட்ராஜ் கூறினார்.
நடராஜ் ஓய்வு: கடந்த ஆண்டு, ஜனவரி, 23ம் தேதி, தேர்வாணைய தலைவராக, நடராஜ் பதவி ஏற்றார். தேர்வாணையத்தில், தலைவர் மற்றும் உறுப்பினர்கள் பதவிக்காலம், 62 வயது அல்லது ஆறு ஆண்டுகள் என, நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நிர்ணயித்த வயது வரம்பை நடராஜ் எட்டியதால், நேற்றுடன், அவரது பதவிக்காலம் முடிந்தது. நேற்று காலை, தமிழ்நாடு திறந்தநிலை பல்கலை பட்டமளிப்பு விழாவில், சிறப்பு விருந்தினராக நடராஜ் கலந்துகொண்டார். அதன்பின், பிற்பகலில், வழக்கம்போல், அலுவலக பணிகளை கவனித்துவிட்டு, மாலையில், தலைவர் பதவியில் இருந்து விடை பெற்றார். அவருக்கு, தேர்வாணைய உறுப்பினர்கள், பணியாளர்கள் வாழ்த்து தெரிவித்தனர். பணியில், தனக்கு ஒத்துழைப்பு அளித்த அனைவருக்கும், நடராஜ் நன்றி தெரிவித்தார்.புதிய தலைவராக நியமிக்கப்பட்டு உள்ள நவநீதகிருஷ்ணன், இன்று காலை, 10:30க்கு, பதவி ஏற்கிறார்.
No comments:
Post a Comment