கல்வி சார்ந்த தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!
Tuesday, March 19, 2013
பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா பொருட்கள் பள்ளி திறக்கும் நாளில் வழங்க நடவடிக்கை
பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் விலையில்லா பொருட்களை, பள்ளி திறக்கும் நாளில் வழங்க, பள்ளிக்கல்வித் துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. பள்ளி மாணவர்களுக்கு, அரசால்,15 வகையான விலையில்லா பொருட்கள் வழங்கப்படுகின்றன. கடந்த ஆண்டு முதல், செயல்படுத்தப்பட்ட, இந்த திட்டம், தாமதமாக துவங்கியதால், இந்த கல்வியாண்டு முடியும் நிலையிலும், பல பொருட்கள் வழங்கப்படாமல் உள்ளன. எனவே, வரும் கல்வியாண்டில், பள்ளி திறக்கும் போதே, அனைத்து பொருட்களையும் வழங்க வேண்டும் என்பதற்காக, அந்தந்த மாவட்ட பள்ளிகளின் எண்ணிக்கை, விலையில்லா பொருட்கள் பெறும் மாணவர்கள் குறித்து, பட்டியல் அனுப்பும்படி, பள்ளிக்கல்வித்துறை கேட்டுக்கொண்டுள்ளது. இந்த பட்டியல்படி, பள்ளி திறப்பதற்கு, 10 நாட்களுக்கு முன், அனைத்து பொருட்களும், அந்தந்த பகுதிகளுக்கு அனுப்பப்பட உள்ளது. அவை பள்ளி திறக்கும் நாளில், மாணவர்களுக்கு வழங்க ஏற்பாடு செய்யப்படுகிறது என, கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment