இவ்வாறு, அவர் பேசினார்.
கல்வி சார்ந்த தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!
Sunday, March 17, 2013
எதிர்காலத்துக்கு கல்வியே அடிப்படை : தமிழக கவர்னர்
நாட்டின் எதிர்காலம், கல்வியை அடித்தளமாக கொண்டுள்ளது,'' என, தமிழக கவர்னர் ரோசய்யா பேசினார்.ஓசூரில், இன்டர்நேஷனல் பள்ளியை, கவர்னர் ரோசய்யா நேற்று துவக்கி வைத்து பேசியதாவது:பள்ளிகள், கல்வி கற்பிக்கும் இடமாக மட்டும் இருக்கக்கூடாது; அவை, மாணவர்களின் தனித்திறமை, கற்பனைத் திறனை கண்டுபிடித்து, அவற்றை ஊக்குவிக்கும் இடமாக இருக்க வேண்டும். நாட்டின் கலாசாரம், பண்பாடு ஆகியவற்றை, மாணவர்கள் பாதுகாக்க வேண்டும். மாணவர்கள் உயர்வான குறிக்கோள்களை நிர்ணயித்து, அவற்றை அடைய முயற்சி செய்ய வேண்டும்.நாட்டின் எதிர்காலம், கல்வியை அடித்தளமாக கொண்டுள்ளது. அனைத்து குழந்தைகளுக்கும் கல்வி கிடைக்க வேண்டும் என்பதே, மத்திய, மாநில அரசுகளின் முக்கிய நோக்கம். கல்வி நிறுவனங்கள், மாணவர்களுக்கு தரமான கல்வியை வழங்குவதோடு, அவர்களை நன்னடத்தை உள்ள குடிமகன்களாகவும் உருவாக்க வேண்டும்.
இவ்வாறு, அவர் பேசினார்.
இவ்வாறு, அவர் பேசினார்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment