கல்வி சார்ந்த தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNSCHOOLS என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNSCHOOLS (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNSCHOOLS என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக கல்வித் துறையின் தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • Saturday, March 30, 2013

    பள்ளி கல்வித் துறையில் இளநிலை உதவியாளர்கள் 176 பேருக்கு பதவி உயர்வு

    பள்ளி கல்வித் துறையில், 176 இளநிலை உதவியாளர்கள், உதவியாளர்களாக, நேற்று பதவி உயர்வு செய்யப்பட்டனர். நேரடி தேர்வு மூலம், உதவியாளர் பணியிடம் தேர்வு செய்யப்படுவது இல்லை. இளநிலை உதவியாளர்களில் இருந்து, பணிமூப்பு அடிப்படையில், உதவியாளர்களாக பதவி உயர்வு வழங்கப்படுகிறது.



    அதன்படி, பள்ளி கல்வித்துறையில், 176 இளநிலை உதவியாளர்கள், உதவியாளர்களாக, பதவி உயர்வு வழங்கும் கலந்தாய்வு, "ஆன்-லைன்' முறையில், நேற்று நடந்தது. பணிமூப்பு பட்டியலில் உள்ளவர்களுக்கு, கலந்தாய்வு நடத்தி, முதன்மைக் கல்வி அலுவலகங்கள், மாவட்ட கல்வி அலுவலகங்கள் மற்றும் உதவி தொடக்கக் கல்வி அலுவலகங்களில், பணி நியமனம் செய்யப்பட்டனர். ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி துறையில், 15 முதல்வர் பணியிடங்கள் காலியாக இருந்தன. முதுநிலை விரிவுரையாளர்களில், பணிமூப்பு தகுதி வாய்ந்த, 15 பேர், முதல்வர்களாக நேற்று, பதவி உயர்வு செய்யப்பட்டனர். இந்த கலந்தாய்வும், ஆன்-லைன் வழியில் நடந்தது.

    No comments:

    Post a Comment