கல்வி சார்ந்த தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNSCHOOLS என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNSCHOOLS (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNSCHOOLS என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக கல்வித் துறையின் தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • Saturday, March 23, 2013

    வாடகைத் தாய் மூலம் பிறந்த குழந்தையைப் பராமரிப்பதற்காக மகப்பேறுக்கு பிந்தைய விடுமுறை எடுத்துக் கொள்ளும் உரிமை அரசு ஊழியரான தாய்க்கு உண்டு -சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு

    குழந்தையைப் பராமரிப்பதற்காக மகப்பேறுக்கு பிந்தைய விடுமுறை எனக்கு தர வேண்டும் என்றும், குடும்ப இன்சூரன்ஸ் திட்டத்தில் எனது குழந்தையின் பெயரையும் சேர்க்க வேண்டும் என்றும் கோரி சென்னை துறைமுகப் பொறுப்புக் கழகத்தில் அதிகாரியாகப் பணியாற்றும் பெண் ஒருவர் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.இந்த மனு மீது விசாரணை நடத்திய நீதிபதி கே. சந்துரு, வாடகைத் தாய் மூலம் பெற்றெடுத்தாலும் தனது குழந்தையைப் பராமரிப்பதற்காக மகப்பேறுக்குப் பிந்தைய விடுமுறை எடுத்துக் கொள்ளும் உரிமை மனுதாரரான தாய்க்கு உள்ளது என்று அண்மையில் தீர்ப்பளித்துள்ளார்.
    வாடகைத் தாய் மூலம் குழந்தைப் பெற்றாலும் அந்தக் குழந்தைக்கு மனுதாரரும், அவரது கணவரும்தான் பெற்றோர் என்பதில் பிரச்னை எதுவும் இல்லை. பிறந்த குழந்தையை தாயார் பராமரிக்க வேண்டியது மிகவும் அவசியம். மேலும், இதன் மூலமே தாய்க்கும், குழந்தைக்குமான பந்தம் வளர்த்தெடுக்கப்படும். ஆகவே, மகப்பேறுக்குப் பிந்தைய விடுமுறையை மனுதாரருக்கு துறைமுக நிர்வாகம் அளித்திட வேண்டும். அந்தக் குழந்தையின் பெயரையும் குடும்ப இன்சூரன்ஸ் திட்டத்தில் சேர்த்திட வேண்டும் என்று நீதிபதி சந்துரு தனது தீர்ப்பில் கூறியுள்ளார்.

    No comments:

    Post a Comment