கல்வி சார்ந்த தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNSCHOOLS என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNSCHOOLS (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNSCHOOLS என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக கல்வித் துறையின் தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • Wednesday, March 27, 2013

    வெண்புள்ளி உள்ள மாணவர்களை புறக்கணிக்கக் கூடாது

    உடம்பில் வெண்புள்ளிகள் உள்ளதை காரணங்காட்டி, மாணவர்களை பள்ளி நிர்வாகம் பாரபட்சமாக நடத்தக்கூடாது' என, பள்ளிக் கல்வி துறை செயலர் உத்தரவிட்டுள்ளார்.தோலில், ஆங்காங்கே வெள்ளையாக தோன்றும் புள்ளிகள், வெண்புள்ளிகள் எனப்படுகிறது. இக்குறைபாடுள்ள மாணவர்களை, பல்வேறு காரணங்கள் கூறி, இடம் கொடுக்க, சில பள்ளி, பல்கலைக் கழக நிர்வாகங்கள் மறுத்து வருகின்றன. வெண்புள்ளிகள் விழிப்புணர்வு இயக்கம் -இந்தியா என்ற தன்னார்வ அமைப்பு, இப்பிரச்னையை, தமிழக அரசின் கவனத்திற்கு கொண்டு சென்றது.இதையடுத்து, பள்ளிக் கல்வி துறை செயலர், பள்ளிக் கல்வி இயக்குனர், ஆரம்ப கல்வி இயக்குனர், மெட்ரிக் பள்ளி இயக்குனர் ஆகியோருக்கு சுற்றிக்கை அனுப்பி உள்ளார். அதில், "வெண்புள்ளிகள் உள்ளதை காரணங்காட்டி, எந்தவொரு மாணவரையும், பள்ளி நிர்வாகங்கள் பாரபட்சமாக நடத்தக் கூடாது. இதை, அனைத்து பள்ளி கல்வி இயக்குனர்களும், தங்கள் கட்டுப்பாட்டில் இயங்கும் பள்ளி நிர்வாகங்களுக்கு அறிவிக்க வேண்டும்' என, தெரிவிக்கப்பட்டுள்ளது.

    No comments:

    Post a Comment