கல்வி சார்ந்த தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNSCHOOLS என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNSCHOOLS (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNSCHOOLS என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக கல்வித் துறையின் தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • Thursday, March 28, 2013

    2 லட்சம் பேருக்கு அரசு வேலை: புள்ளி விபரங்களுடன் அரசு தகவல்

    அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களில், 47 ஆயிரத்து 273 பேர் நியமிக்கப்பட உள்ளனர்" என, அமைச்சர் முனுசாமி தெரிவித்தார். அரசு துறைகளில் உள்ள காலிப் பணியிடங்கள் நிரப்புவது குறித்து, சட்டசபையில் நேற்று, கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இத்தீர்மானத்தின் மீது, எம்.எல்.ஏ.,க்கள் பேசியதாவது: சவுந்தரராஜன் - மார்க்சிஸ்ட்: வணிக வரி, வேலைவாய்ப்பு, மருத்துவம், தொழிலாளர் உள்ளிட்ட அரசின் பல்வேறு துறைகளில், பணியிடங்கள் காலியாக உள்ளன. இதனால், அரசுப் பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது. கருணை அடிப்படையில், வாரிசுகளுக்கு வழங்கப்படும் பணிக்காக, ஏராளமானோர் காத்திருக்கின்றனர்.

    இவர்கள் ஐந்து முதல், எட்டு ஆண்டுகள் வரை, பணி கிடைக்காமல் உள்ளனர். காலிப் பணியிடங்களில், இவர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    ஆறுமுகம் - இந்திய கம்யூனிஸ்ட்: மருத்துவத் துறையில், அடிப்படை பணியாளர்கள் பற்றாக்குறை உள்ளது. இதுபோன்று, பல துறைகளில் பணியிடங்கள் காலியாக உள்ளன. அரசின் திட்டங்களை விரைவாகச் செயல்படுத்த, காலிப் பணியிடங்கள் உடனே நிரப்பப்பட வேண்டும்.

    ரெங்கராஜன் - காங்கிரஸ்: அரசு மருத்துவமனைகளில், தொழில்நுட்பப் பணியாளர்கள், இரவு நேர காவலர்கள் போன்ற பணியிடங்கள் காலியாக உள்ளன. அரசின் திட்டங்கள் மற்றும் பணிகள் விரைவாக நடைபெற, காலிப் பணியிடங்கள் உடனே நிரப்பப்பட வேண்டும். உள்ளாட்சி அமைப்புகளில், கூடுதல் பணியிடங்கள் ஏற்படுத்தப்பட வேண்டும்.

    இதற்கு பதில் அளித்து, நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் முனுசாமி பேசியதாவது: அரசுப் பணிகளுக்கு, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், ஆசிரியர் தேர்வு வாரியம், சீருடை பணியாளர் தேர்வு குழுமம், வேலை வாய்ப்பகங்கள் மற்றும் தேர்வு குழுக்கள் ஆகியவை மூலம் போட்டி மற்றும் நேர்முகத் தேர்வு நடத்தி, பணியாளர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர்.

    தேர்வு செய்யப்படும் பணியாளர்கள், காலிப் பணியிடங்களில் நியமிக்கப்படுகின்றனர். ஒவ்வொரு பதவிக்கான சிறப்பு விதிகளில் உள்ள நியமன முறையின்படி, பதவிகள் நிரப்பப்படுகின்றன. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மற்றும் வேலைவாய்ப்பகம் மூலம் அரசு துறைகளில், 54,420 பணியிடங்களும், தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் மூலம், 13,581 பணியிடங்களும், பள்ளி மற்றும் கல்லூரிகளில், 64,435 ஆசிரியர் மற்றும் ஆசிரியரல்லாத பணியிடங்களும் நிரப்பப்பட்டு உள்ளன.

    மேலும், 16,793 சத்துணவு அமைப்பாளர், சமையலர் மற்றும் சமையல் உதவியாளர், 11,803 அங்கன்வாடி பணியாளர் பணியிடங்களும் நிரப்பப்பட்டு உள்ளன. அரசு போக்குவரத்துக் கழகங்களில், 16,963 பணியிடங்களும், கூட்டுறவு நியாய விலை கடைகளில், 6,307 பணியிடங்களும், தமிழக மின் வாரியத்தில், 5,489 பணியிடங்களும் நிரப்பப்பட்டுள்ளன.

    அரசின் பிற துறைகளில், 3,717 பணியிடங்களும் நிரப்பப்பட்டு உள்ளன. 22,269 ஆசிரியர் பணியிடங்களும், 1,091 காவல் உதவி ஆய்வாளர் பணியிடங்களும், மின் வாரியத்தில், 4,042, கூட்டுறவு வங்கிகளில், 3,607, தமிழக அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால், 10,105 காலிப் பணியிடங்களும், தமிழக மருத்துவப் பணி கழகத்தால், 2,159 மருத்துவர்கள் மற்றும் 4,000 செவிலியர் பணியிடங்களும் நிரப்பப்பட உள்ளன. இப்பணியிடங்களை நிரப்பும் பணிகள் நடந்து வருகின்றன.

    காலிப் பணியிடங்கள் நிரப்பப்படாததால், பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது என, மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் காங்கிரஸ் உறுப்பினர்கள் குறிப்பிட்டனர். இது தவறானது. பணிகளில் எவ்வித தொய்வும் ஏற்படவில்லை. கடந்த, 22 மாதத்தில் இரண்டு லட்சம் பேர் பணி அமர்த்தப்பட்டு உள்ளனர்.

    அரசுப் பணிகள் தொய்வின்றி நடந்ததால் தான், 15 சதவீதம் வருவாய் உயர்ந்துள்ளது. பல மாநில அரசுகள் கடன் சுமையில் அவதிப்படுகின்றன. ஆனால், தமிழக அரசு, 664 கோடி ரூபாய் அளவிற்கு உபரி வருவாய் ஈட்டி உள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.

    No comments:

    Post a Comment