கல்வி சார்ந்த தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

Follow my Email

 • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNSCHOOLS என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNSCHOOLS (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNSCHOOLS என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக கல்வித் துறையின் தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
 • Thursday, December 26, 2013

  மோசடி கல்வி நிறுவனங்களை தடுக்க, நிபுணர்கள் குழுவை, பல்கலை கழக மானியக் குழுவான யு.ஜி.சி., அமைத்து உள்ளது

  அனைத்து பல்கலைக் கழகங்களின் துணைவேந்தர்களுக்கும், யு.ஜி.சி., தலைவரான, ஆர்.பி.அகர்வால் அனுப்பியுள்ள கடிதம்: "யு.ஜி.சி., சட்டம் 1956 ஐ அமல்படுத்தவும், ஆலோசனை வழங்கவும், ஏழு பேர் குழுவை, யு.ஜி.சி., அமைத்துள்ளது. 


  இக்குழுவில், கர்நாடக பல்கலை முன்னாள் துணைவேந்தர், ஏ.எம்.பதான், பாரதிதாசன் பல்கலை முன்னாள் துணைவேந்தர், தங்கமுத்து, டில்லி, இந்தியன் சட்டப்பள்ளி முன்னாள் இயக்குனர், சந்திரசேகர பிள்ளை, அவினாசிலிங்கம் பல்கலை துணைவேந்தர், ஷீலா ராமச்சந்திரன், மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை, முன்னாள் இணை செயலர், சகாய், யு.ஜி.சி., இணைசெயலர், கே.பி.சிங் ஆகியோர், இடம் பெற்றுள்ளனர். இக்குழுவினர், உயர்கல்வியில் வேகமாக ஏற்படும் மாற்றங்கள், உலகமயமாக்கல், தனியார் மயம், தனியார் கல்வி நிறுவனங்களின் பெருக்கம், சில கல்வி நிறுவனங்களில் நடக்கும் முறைகேடுகள் மற்றும் அவற்றை தடுப்பதற்கான வழிமுறைகள், கல்வி நிறுவனங்களுக்கு தேவையான விரிவாக்கம் மற்றும் அவற்றுக்கு தேவையான நிதி வழங்கல் போன்றவை குறித்து, பலமுறை கூடி விவாதித்துள்ளது. உயர்கல்வியில், ஆராய்ச்சிக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, பல்கலைகளின் துணைவேந்தர்களிடம், இது தொடர்பான கருத்து கேட்க, குழு முடிவு செய்துள்ளது. துணைவேந்தர்கள் தங்கள் கருத்துக்களை, இக்குழுவின் பரிசீலனைக்கு அனுப்பலாம். இவ்வாறு, கடிதத்தில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

  No comments:

  Post a Comment