கல்வி சார்ந்த தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNSCHOOLS என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNSCHOOLS (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNSCHOOLS என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக கல்வித் துறையின் தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • Friday, December 13, 2013

    தனியார் மூலம் கணினி மயமாகும் அரசு ஆவணங்கள்: ரகசியம் பறிபோகும் அபாயம் - நாளிதழ் செய்தி

    அரசு ஆவணங்களை, தனியார் மூலம், கணினி மயமாக்கும் திட்டத்தால், அரசின் முக்கியமான ரகசிய தகவல்கள் திருடப்படும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.

    தமிழக அரசின், அனைத்து துறைகளின் அன்றாட செயல்பாடு மற்றும் திட்டங்களை கணினி மயமாக்கும், மின் ஆளுமை திட்டம், தீவிரமாக நடைமுறைப் படுத்தப்படுகிறது. 'உள்ளாட்சி துறைகளின் சேவைகள் மற்றும் ஆவணங்களை, மின் ஆளுமை திட்டத்தின் கீழ் கொண்டு வர வேண்டும்' என, மத்திய அரசு உத்தரவிட்டு, காலக்கெடுவை யும் நிர்ணயித்துள்ளது.

    மத்திய அரசின் ஒதுக்கீடு:

    இக்காலக்கெடுவுக்குள், மின் ஆளுமை செய்யவில்லை எனில், உள்ளாட்சி துறைக்கான, மத்திய அரசின் ஒதுக்கீட்டைப் பெறுவதில், சிக்கல் ஏற்படும். இந்நிலையில், தகவல் தொழில் நுட்பத்தில் தேர்ச்சி பெற்ற தனியாரிடம், ஆலோசனை திட்ட உதவி பெற, அண்ணா பல்கலைக் கழகத்துடன் இணைந்து, 'ஹேகத்தான்' என்ற நகர்ப்புற உள்ளாட்சி குறியீடு கருத்தரங்கை, நகராட்சி நிர்வாக ஆணையரகம், நாளை மற்றும் நாளை மறுநாள் நடத்துகிறது. இதற்கிடையே, அனைத்து அரசுத் துறைகளின் ஆவணங்களை, கணினி மயமாக்க, அனுபவமுள்ள தனியார் கணினி நிறுவனங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதற்கான டெண்டரை, 'எல்காட்' நிறுவனம் கோரியுள்ளது.








    இதில், பணி விவரம் குறித்து கூறப்பட்டுள்ளதாவது: அரசு துறைகள் மற்றும் நிறுவனங்களிடம், கையால் பராமரிக்கப்பட்ட பல்வேறு ஆவணங்கள் உள்ளன. இவற்றை எலக்ட்ரானிக் ஆவணங்களாக மாற்ற வேண்டும். இதற்கென சிறப்பு மென்பொருளுடன், அகர வரிசையில் ஆவணப்படுத்த வேண்டும். சில ஆவணங்களை எலக்ட்ரானிக் ஆவணங்களாக மாற்றும் போது, புகைப்படங்கள், வரைபடங்களையும் சேர்க்க வேண்டும். இதற்கான, மென்பொருளும் தேவைப்படுகிறது.

    No comments:

    Post a Comment