பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு மாணவ, மாணவியருக்கு, காலாண்டு,அரையாண்டு தேர்வுகளும், மாநில அளவில், பொது தேர்வாகநடக்கிறது. கேள்வித்தாள் தயாரித்து, கல்வித்துறைக்கு வழங்கும்பணியை, தேர்வுத்துறை செய்கிறது. தேர்வை நடத்த வேண்டியது,கல்வித்துறையின் பொறுப்பு.
கடந்த மாதம் இறுதியில், அரையாண்டு தேர்வு துவங்கியது. 10 நாள்விடுமுறைக்குப் பின், இம்மாதம், 2ம் தேதி, மீண்டும் பள்ளிகள்திறக்கப்பட்டன. விடுமுறைக்கு முன்னதாக, மொழிப்பாட தேர்வுகள் நடந்தன. விடுமுறைக்குப் பின்,கணிதம், அறிவியல், சமூக அறிவியல் தேர்வுகள் நடத்தப்படும் என, அறிவிக்கப்பட்டிருந்தன.
கணிதம், அறிவியல் தேர்வுகள் நடந்த நிலையில், 10ம் வகுப்பு மாணவருக்கு, நேற்று சமூக அறிவியல்தேர்வு நடக்க இருந்தது. ஆனால், முன்கூட்டியே கேள்வித்தாள், வெளியான விவகாரம், விருதுநகர்மாவட்டத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த தகவல், அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டது. மாநில அளவில்,பொது தேர்வாக நடத்தப்படுவதால், கேள்விகள், எஸ்.எம்.எஸ்., மூலம், மற்ற மாவட்டங்களுக்கும்பரவியிருக்கலாம் என, அதிகாரிகள் கருதினர். இதைத் தொடர்ந்து, மாநிலம் முழுவதும், சமூக அறிவியல்தேர்வு ரத்து செய்ய, கல்வித்துறை உத்தரவிட்டது. இத்தேர்வை, 10ம் தேதி மீண்டும் நடத்தவும், துறைஅறிவுறுத்தி உள்ளது.
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட எந்த மாவட்டத்திலும், சமூக அறிவியல் தேர்வுநடக்கவில்லை. இதனால், மாநிலம் முழுக்க, தேர்வு ரத்து செய்யப்பட்டிருப்பது உறுதியானது. முந்தையஆட்சி காலத்தில், தேனி மாவட்டம், அல்லி நகரத்தில், 10ம் வகுப்பு சமூக அறிவியல் பொதுத்தேர்வுகேள்வித்தாள், வெளியானது. இதனால், இத்தேர்வு ரத்து செய்யப்பட்டு, மீண்டும் நடத்தப்பட்டது.
விரைவில், பொதுத்தேர்வு துவங்க உள்ள நிலையில், அரையாண்டு தேர்வு கேள்வித்தாள் வெளியாகிஇருப்பது, அதிகாரிகளை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. இதேபோல், பொதுத்தேர்வில் நடந்துவிடக்கூடாது என்பதற்காக, கேள்வித்தாள் கட்டுகள் வைக்கும் இடத்தில், பாதுகாப்பை பலப்படுத்ததிட்டமிட்டுள்ளனர்.
No comments:
Post a Comment