கல்வி சார்ந்த தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNSCHOOLS என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNSCHOOLS (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNSCHOOLS என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக கல்வித் துறையின் தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • Friday, January 11, 2013

    பள்ளிக்கூட பணிகளை கவனிக்காத, தலைமை ஆசிரியர்களுக்கு, ஆறு முக்கிய விதிமுறைகளை விதித்து, பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

    "பிற பணி' என்ற பெயரில், பள்ளிக்கூட பணிகளை கவனிக்காத, தலைமை ஆசிரியர்களுக்கு, ஆறு முக்கிய விதிமுறைகளை விதித்து, பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

    1 . பள்ளி வேலை நாட்களில் தலைமை ஆசிரியர்கள், பிற பணிக்காக வெளியூர் செல்ல, சி.இ.ஓ.,வின் முன்அனுமதியை பெற வேண்டும்.


    2. பிற பணி விவரங்களை, பள்ளியில் பராமரிக்கப்படும் நடமாடும் பதிவேட்டில் பதிய வேண்டும்
    .

    3. இதே விவரங்களை, சி.இ.ஓ., அலுவலக நடமாடும் பதிவேட்டிலும் இடம் பெற செய்ய வேண்டும்.

    4. சி.இ.ஓ.,க்கள் தங்களது மாவட்டத்தில் பணிபுரியும் தலைமை ஆசிரியர்களின், பிற பணிகளை அறிந்து, தேவைப்படும் பட்சத்தில், உயரதிகாரிகளுக்கு தெரிவிக்க வேண்டும்.

    5. தவிர்க்க முடியாத காரணத்திற்காக மட்டுமே, தலைமை ஆசிரியர்களை, சி.இ.ஓ.,க்கள், மாவட்ட கல்வி அலுவலர்கள் நேரில் வரவழைக்க வேண்டும்.

    6. சி.இ.ஓ., - டி.இ.ஓ., அலுவலகங்களில் தபால் கொடுத்தல் போன்ற சாதாரண பணிகளுக்கு, பள்ளி அலுவலக ஊழியர் அல்லது பணி சுமையில்லாத பிற ஆசிரியர்களை பயன்படுத்தலாம்.


    இந்த விதிமுறைகள் அடங்கிய உத்தரவு கடிதம், பள்ளிக்கல்வித் துறை மூலம், சி.இ.ஓ., அலுவலகங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

    No comments:

    Post a Comment