அரசு விடுமுறை, பயிற்சி என, ஜனவரி மாதம் 22 நாட்கள், ஆசிரியர்கள் பள்ளிக்குச் செல்லவில்லை.பள்ளிகளில் பருவமுறை கல்வி திட்டத்தில், பாடம் கற்பிக்கின்றனர். மூன்றாம் பருவ வகுப்புகள், ஜன., 2 ல் துவங்கின. ஜனவரியில்,
13 நாட்கள் அரசு விடுமுறை விடப்பட்டது. மேலும், ஆசிரியர்களுக்கு ஊரக வளர்ச்சித்துறை, அனைவருக்கும் கல்வி திட்டம் சார்பில் 9 நாட்கள் பயிற்சிகள் வழங்கப்பட்டன. இதனால், அவர்கள் பள்ளிக்கு செல்லவில்லை.
ஒட்டு மொத்தமாக, 22 நாட்கள் பள்ளிக்கே செல்லவில்லை. இதனால், மூன்றாம் பருவ துவக்கத்திலேயே, பாடம் கற்பிக்க முடியவில்லை. பிப்ரவரி, மார்ச் மாதங்கள் மட்டுமே எஞ்சியுள்ள நிலையில், கல்வி அதிகாரிகள் ஆய்வு உள்ளிட்ட பணிகள் உள்ளன. இதனால், இறுதி தேர்வுக்கு தனிக்கவனம் செலுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
ஆசிரியர் ஒருவர் கூறுகையில், "இவ்வாண்டு துவக்கத்திலேயே ஆசிரியர்கள் பயிற்சிக்கு சென்றுவிட்டோம். சனி தோறும், அனைவருக்கும் கல்வி திட்ட பயிற்சி நடக்கிறது. பள்ளிக்குச் செல்வதே அரிதாகி விட்டது. மாணவர்களுக்கு எப்படி பாடம் கற்பிக்க முடியும்" என்றார்.
No comments:
Post a Comment