ஈரோடு மாவட்ட மலைகிராமமான பர்கூர், தாமரைக்கரையில் பள்ளி செல்லா மற்றும் பள்ளி இடைநின்ற மாணவர்கள் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பின் உண்டு உறைவிட பள்ளி உள்ளது.
இந்த பள்ளியில் 6ம் வகுப்பு படிக்கும் கனேசன் என்ற மாணவன் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் மாவட்ட அளவில் நடத்திய தேசிய அறிவியல் மாநாட்டில் ஆற்றல் வளங்களின் பயன்பாடு என்ற தலைப்பில் ஆய்வு கட்டுரையை சமர்ப்பித்தார்.பனாரஸ் பல்கலையில் மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை சார்பில் நடந்த 20வது தேசிய மாநாட்டில் 6ம் வகுப்பு மாணவன் கட்டுரையை சமர்ப்பித்தார். மாநாட்டின் இறுதியில் தமிழகம் சார்பில் குழந்தை விஞ்ஞானியாக கனேசன் தேர்வு செய்யப்பட்டார்.
தேர்வு செய்யப்பட்ட மாணவன் கனேசனுக்கு விஞ்ஞானி லால்ஜிசிங் நினைவு பரிசும், பதக்கமும் வழங்கப்பட்டது.
No comments:
Post a Comment