ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் 2010-11ஆம் ஆண்டில் நேரடி போட்டித்தேர்வின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட 34 உதவித்தொடக்கக்கல்வி அலுவலர்கள் தற்போது பல்வேறு மாவட்டங்களில் பயிற்சி உதவித்தொடக்கக்கல்வி அலுவலர்களாக பணிபுரிந்து வருகின்றனர்.இந்நிலையில் இவர்களில் 16 பேர் முதுகலை ஆசிரியர்களுக்கான போட்டித்தேர்விலும்...
பங்கேற்று தேர்வு செய்யப்பட்டு 31.12.2012 அன்று பணியானை பெற்றுள்ளதால், தங்களை முதுகலை ஆசிரியர்களாக பணியேற்க இப்பணியில் இருந்து விடுவிக்கதொடக்கக்கல்வி இயக்குனருக்கு விண்ணப்பித்தனர். இதனை ஏற்று 16 பேரையும் பயிற்சி காலத்திற்கான ஊதியத்தை கருவூலத்தில் திரும்ப செலுத்தும் நிபந்தனையோடு பயிற்சி உதவித்தொடக்கக்கல்வி அலுவலர் பணியிலிருந்து விடுவிக்க தொடக்கக்கல்வி இயக்ககம் உத்தரவு.
No comments:
Post a Comment