கல்வி சார்ந்த தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNSCHOOLS என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNSCHOOLS (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNSCHOOLS என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக கல்வித் துறையின் தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • Thursday, April 4, 2013

    திட்டமிட்டபடி செமஸ்டர் தேர்வு: மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்படாது

    கல்லூரிகள் மூடப்பட்டதால், செமஸ்டர் தேர்வுகள் தள்ளிப் போகாது. திட்டமிட்டபடி, தேர்வுகள் நடத்தப்படும்" என, உயர் கல்வித்துறை அமைச்சர் பழனியப்பன் கூறினார்


    சட்டசபையில், உயர்கல்வி மானியக் கோரிக்கை விவாதத்தின் போது, தி.மு.க., - எம்.எல்.ஏ., கோ.வி.செழியன் பேசுகையில், "கல்லூரிகள் மூடப்பட்டதால், மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில், செமஸ்டர் தேர்வுகளை நடத்த, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்" என, கேட்டுக் கொண்டார்.

    இதற்கு, உயர்கல்வித்துறை அமைச்சர் பழனியப்பன் அளித்த பதில்: கல்லூரிகள் இரு பருவங்களாக நடக்கிறது. இரு பருவங்களுக்கும் தலா, 90 நாட்கள் வேலை நாட்கள். தற்போது, இரண்டாவது பருவம் நடக்கிறது. கல்லூரிகள் மூடப்பட்டதால், வேலை நாள்களில் பெரிய பாதிப்பில்லை.

    பற்றாக்குறை வரும் என , எதிர்பார்க்கும் வேலை நாட்கள், ஐந்து நாட்களுக்குள் தான் உள்ளன. இப்பற்றாக்குறையை, சனி, ஞாயிறு ஆகிய நாட்களில், கல்லூரிகளை நடத்தி, ஈடுசெய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

    எனவே, கல்லூரிகளில், இரண்டாம் பருவ தேர்வு தள்ளிப்போகாது. திட்டமிட்டபடி நடக்கும். இளம்கலை பட்டங்களை முடித்து, மேல்படிப்பு செல்லும் மாணவர்களுக்கு, பாதிப்பு ஏற்படாத வகையில், பருவ தேர்வுகள் நடத்தி முடிக்கப்படும். இவ்வாறு, அமைச்சர் பழனியப்பன் கூறினார்.

    No comments:

    Post a Comment