இந்தியாவில் உள்ள 15 மாநிலங்களில் அரசு நடத்தும் 11 லட்சம் பள்ளிகளில் படிக்கும் 22 கோடிக்கும் அதிகமான மாணவ, மாணவிகளுக்கு வரும் கல்வியாண்டில் முழு உடல் பரிசோதனை செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது. தேசிய ஊரக சுகாதார இயக்கத்தின் கீழ் செயல்படுத்தப்படும் இந்த திட்டத்துக்காக மண்டல அளவில் 2,414 மருத்துவ குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இதற்காக ரூ.383 கோடி நிதியை மத்திய சுகாதார துறை அமைச்சர் குலாம்நபி ஆசாத் ஒதுக்கியுள்ளார். மாணவ, மாணவிகளின் கண் பார்வை, செவித் திறன், சருமம், இதயம், பற்கள் என உடலின் அனைத்து பாகங்களும் ஒழுங்காக இருக்கிறதா என்பது பரிசோதனையின் போது உறுதி செய்யப்படும். குறை இருந்தால் அதற்கான சிகிச்சைக்கு மருத்துவர் குழு பரிந்துரை செய்யும். நோய் தடுப்பு ஊசி, இரும்பு சத்து மாத்திரை, விட்டமின் சி மற்றும் ஏ மாத்திரைகளும் பரிசோதனையின் போது பள்ளி குழந்தைகளுக்கு வழங்கப்படும். 6 முதல் 18 வயது வரையிலான அனைத்து பள்ளி குழந்தைகளுக்கும் இந்த பரிசோதனை செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment