இந்த அறிவிப்பு வெளியான 10 நாள்களுக்குள் அனைத்து பிரீபெய்டு வாடிக்கையாளர்களுக்கும் எஸ்எம்எஸ் மூலம் இதுகுறித்து தகவல் தெரிவிக்குமாறு டிராய் கேட்டுக் கொண்டுள்ளது. அதன்பிறகு, ஐஎஸ்டி வசதி வேண்டும் என்று கோரும் வாடிக்கையாளர்கள் தவிர மற்றவர்களுக்கு ஐஎஸ்டி வசதியை 60 நாள்களுக்குள் ரத்து செய்யுமாறு உத்தரவிட்டுள்ளது.
சர்வதேச தொலைபேசி எண்ணிலிருந்து பரிசு விழுந்துள்ளதாக அழைப்பு, எஸ்எம்எஸ் வருவதாகவும், அவர்கள் குறிப்பிடும் எண்ணுக்கு தொடர்புகொள்ளும்போது அதிக கட்டணம் பிடித்தம் செய்வதாகவும் புகார் எழுந்ததால் டிராய் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.
No comments:
Post a Comment