தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படும். இதனால், மாணவர்களின் தனித்திறன் வளர வாய்ப்பில்லை; தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் முழுமையாக தெரிவதும் இல்லை, என்ற குறைபாடு உள்ளது.
இதை போக்கும் வகையில், வாரத்தில் திங்கட்கிழமை மட்டும் கூட்டு வழிபாடு நடத்தவும், மற்ற நாட்களில் வகுப்பறை வழிபாடு நடத்தவும், பள்ளி கல்வித் துறை உத்தரவிட்டது. இதன்படி, அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், ஜூலை 7 முதல் வகுப்பறை வழிபாடு நடத்தப்படுகிறது.
இதில், தினமும் காலையில் ஒவ்வொரு வகுப்பிலும், வகுப்பு ஆசிரியர் தலைமையில், ஐந்து மாணவர்கள் தங்கள் திறனை வெளிப்படுத்தும் வகையில், ஒரு மாணவன் தமிழ்தாய் வாழ்த்து படித்தும், அடுத்த மாணவன் திருக்குறள் படித்தும், மற்ற இரு மாணவர்கள் பழமொழி, நன்னெறி விளக்கம் படித்தும், ஐந்தாவது மாணவன் அன்றைய நாளிதழ் செய்திகளை வாசித்தும் வருகின்றனர். இதே போல், தினமும் வகுப்றை வழிபாடு நடைபெறுகிறதா, என கல்வி அதிகாரிகள் திடீர் ஆய்வு செய்ய, பள்ளிக் கல்வி துறை உத்தரவிட்டுள்ளது.
No comments:
Post a Comment