இது தொடர்பாக டி.என்.பி.எஸ்.சி. செயலர் விஜயகுமார்வெளியிட்டுள்ள அறிவிப்பு: துணை கலெக்டர், டி.எஸ்.பி., வணிகவரித்துறை உதவி கமிஷனர், மாவட்ட பதிவாளர், மாவட்டவேலைவாய்ப்பு அலுவலர் ஆகிய பதவிகளுக்கான குரூப்-1முதல்நிலைத் தேர்வு, வரும், 30ம் தேதி நடக்கும் எனவும், இதற்கு, 6ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் எனவும், ஏற்கனவேதெரிவிக்கப்பட்டிருந்தது.
தேர்வுக்கு விண்ணப்பிக்க, 24ம் தேதி வரை, வாய்ப்புவழங்கப்படுகிறது. இதனால், முதல்நிலைத் தேர்வு, ஜனவரி, 27ம்தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள், இணையதளத்தில் பதிவு செய்த, இருநாட்களுக்குள், கட்டணங்களை செலுத்த வேண்டும். இவ்வாறு செயலர் தெரிவித்துள்ளார்.
மொத்தமுள்ள 25 காலி பணியிடங்களுக்கு, ஏற்கனவே, 40 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர். தற்போது,தேதி நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதால், மேலும், 30 ஆயிரம் பேர் வரை விண்ணப்பிக்கலாம் என,எதிர்பார்க்கப்படுகிறது.
No comments:
Post a Comment