அதேபோல் விலை ஏற்றம் அடுத்த 2 மாதமும் இந்த விலைவாசி தொடர்ந்து உயரும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.இந்த சூழ்நிலையில் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஒய்வூதியதரர்களுக்கான அகவிலைப்படி 8% முதல் 9% ஆக உயரக்கூடும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இந்த அகவிலைப்படி உயர்வு ஜனவரி 2013 முதல் உயர்த்தக்கூடும். அதேபோல் மத்திய அரசு அறிவித்த ஓரிரு வாரங்களில் தமிழக அரசும் உயர்த்தும். அத்தியாவாசி பொருட்கள்களின் விலைவாசி உயர்வால் சிக்கி தவிக்கும் மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வால் சற்று நிவாரணம் கிடைக்கும் என்பதால் அகவிலைப்படி உயர்வை ஆவலுடன் எதிர்ப்பார்க்கின்றனர்.
ஆனால் இந்த அகவிலைப்படி உயர்வு 8%க்கு குறைய வாய்ப்பில்லை என்று புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. ஆகையால் ஜனவரி 2013ல் குறைந்தபட்சம் அகவிலைப்படி 80% ஆக இருக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
No comments:
Post a Comment