தற்போது 1 முதல் 8ம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவியருக்கு 3ம் பருவ பாடப்புத்தகங்கள் அரையாண்டு தேர்வு விடுமுறை முடிந்து ஜனவரி 2ம் தேதி பள்ளிகள் திறந்ததும் வழங்குவதற்கு கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு இலவசமாக வழங்குவதற்காக 2.5 கோடி பாடப் புத்தகங்கள் அச்சிடும் பணி மும்முரமாக நடந்து வருகிறது.
இதற்கிடையே அடுத்த கல்வியாண்டுக்கு தேவையான பாடப் புத்தகங்களை அச்சிடுவதற்கான பணியை தமிழ்நாடு பாடநூல் கழகம் துவக்கி உள்ளது. இதுகுறித்து பாடநூல் கழகத்தை சேர்ந்த அதிகாரி கூறுகையில், ‘தற்போது மூன்றாம் பருவ பாடப் புத்தகங்களை அச்சிடும் பணியில் தீவிர கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. அடுத்த கல்வியாண்டிற்கு 1 முதல் பிளஸ் 2 வரை 9.5 கோடி பாடப்புத்தகங்கள் தேவைப்படுகிறது. தற்போது 12 சதவீத பாடப்புத்தகங்கள் இருப்பு இருக்கின்றன. மீதமுள்ள புத்தகங்கள் அச்சிடும் பணி பொங்கலுக்கு முன் துவங்கும். 140 அச்சகங்களில் இந்த பணிகள் நடக்கும். வரும் ஏப்ரலில் அச்சடிக்கும் பணி முடிந்து மே மாதம் பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது. ஜூன் மாதம் பள்ளி திறந்ததும் மாணவ, மாணவியருக்கு இலவசமாக புத்தகங்கள் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது’
No comments:
Post a Comment