குரூப்-4 தேர்வில், தேர்வு பெற்றவர்களுக்கு, சான்றிதழ் சரிபார்ப்புமற்றும் துறை வாரியாக பணி ஒதுக்கீடு பணி, டி.என்.பி.எஸ்.சி.,அலுவலகத்தில் நடந்து வருகிறது. ஏற்கனவே, தட்டச்சர்,சுருக்கெழுத்தர் உள்ளிட்ட பணிகளுக்கான கலந்தாய்வு நடத்தப்பட்டு,உத்தரவுகள் வழங்கப்பட்டன.
இதைத் தொடர்ந்து, இளநிலை உதவியாளர்களுக்கான சான்றிதழ்சரிபார்ப்பு மற்றும் பணி நியமன கலந்தாய்வு, தேர்வாணையஅலுவலகத்தில், நேற்று துவங்கியது. அப்போது, தேர்வாணையதலைவர் நடராஜ், நிருபர்களிடம் கூறியதாவது:
இளநிலை உதவியாளர்கள் பணி நியமன கலந்தாய்வு, 10 நாட்கள் வரை நடக்கும். தினமும், 300 பேர் வீதம்அழைக்கப்படுவர். "ரேங்க்" அடிப்படையில், அனைவருக்கும், பணி ஒதுக்கீடு வழங்கப்படும். வி.ஏ.ஓ.,பணியிடங்களுக்கான தேர்வு முடிவுகள், நவ.,30ல் வெளியானது.
இதையடுத்து, இம்மாத இறுதியில் இருந்து, கலந்தாய்வு நடக்கும். அதன்பின், குரூப்-1, குரூப்-2 தேர்வுமுடிவுகள் வெளியிடப்படும். அடுத்த ஆண்டுக்கான தேர்வு கால அட்டவணை, ஜனவரியில்வெளியிடப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
No comments:
Post a Comment