திருமங்கலம், திவ்ய பிரியா; மண்டபம், திவ்யா தாக்கல் செய்த மனு: நாங்கள், மதுரை மீனாட்சி அரசு மகளிர் கல்லூரியில், 2010ல், பி.ஏ., - தொடர்பியல் ஆங்கிலம், தேர்ச்சி பெற்றோம். பின், பி.எட்., படித்தோம். ஜூலை, 12ம் தேதி நடந்த ஆசிரியர் தகுதித் தேர்வில் முறையே, 105, 95 மதிப்பெண்கள் பெற்றோம். நவ., 6ல், சான்றிதழ் சரிபார்ப்பு நடந்தது. தேர்வு வாரியம் வெளியிட்ட, உத்தேச தேர்வு பட்டியலில், எங்கள் பெயர்கள் இல்லை. "பி.ஏ., தகவல் தொடர்பு ஆங்கிலம், பி.ஏ., ஆங்கிலத்திற்கு சமமானது இல்லை' என, தேர்வு வாரியம் தெரிவித்தது. "மதுரை காமராஜ் பல்கலை தொடர்பியல் ஆங்கிலம், பி.ஏ., ஆங்கிலத்திற்கு சமமானது' என, நவ., 27ல், உயர்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. பட்டதாரி ஆசிரியர்களாக, எங்களுக்கு நியமன உத்தரவு வழங்கவும், ஆசிரியர் தேர்வு வாரியம், டிச., 5ல் வெளியிட்ட பட்டியலை ரத்து செய்யவும் உத்தரவிட வேண்டும். இவ்வாறு, மனுவில் குறிப்பிட்டுள்ளனர். நீதிபதி கே.ரவிச்சந்திரபாபு முன், மனு விசாரணைக்கு வந்தது.
ஒரு பணி இடத்தை காலியாக வைத்திருக்க வேண்டும் எனவும், பள்ளிக் கல்வித் துறை செயலர், ஆசிரியர் தேர்வு வாரிய தலைவருக்கு நோட்டீஸ் அனுப்பவும், நீதிபதி உத்தரவிட்டார்.
No comments:
Post a Comment