கல்வி சார்ந்த தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!
Saturday, December 29, 2012
P.G (முதுகலை ஆசிரியர் ) நியமனம் 31ம் தேதி கலந்தாய்வு
முதுகலை ஆசிரியர்கள் பணி நியமனத்துக்கான கலந்தாய்வு, நாளை நடக்கிறது. முதுகலை ஆசிரியர்கள், 2,895 பேரை நியமனம் செய்வதற்கான போட்டி தேர்வு, சில மாதங்களுக்கு முன் நடைபெற்றது. இது தொடர்பான வழக்கு, கோர்ட்டில் நிலுவையில் உள்ளதால், 500 பணியிடங்கள் மட்டும் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது. தற்போது, 2,300 பணியிடங்களை நிரப்ப திட்டமிடப்பட்டு உள்ளது. இதற்கான கலந்தாய்வு, நாளை, அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அலுவலகங்களில் நடக்கிறது. மாவட்டத்துக்குள், பணி நியமனம் வேண்டுபவர்களுக்கு, காலையிலும், வேறு மாவட்டங்களில், நியமனம் வேண்டுபவர்களுக்கு, பிற்பகலிலும் கலந்தாய்வு நடக்கிறது. தேர்வுச் செய்யப்பட்டவர்களுக்கு, அழைப்பாணை கடிதங்கள் அனுப்பப்பட்டு உள்ளன. தேர்வு பட்டியலில் இருந்து தகுதியில்லாத, 50க்கும் மேற்பட்டோர் நீக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இது குறித்த அதிகார பூர்வமான அறிவிப்பு வெளியிடப்படவில்லை.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment