கல்வி சார்ந்த தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!
Thursday, February 28, 2013
வருமான வரி உச்சவரம்பில் மாற்றம் இல்லை.ரூ.2 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை வருமானம் உள்ளவர்களின் வரியில் ரூ.2 ஆயிரம் தள்ளுபடி செய்யப்படும்
சம்பளதாரர்களுக்கு வருமான வரி விலக்கு உச்சவரம்பு ரூ.2 லட்சமாக உள்ளது. ரூ.2 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை வருமானம் உள்ளவர்கள் 10 சதவீதம் வரி செலுத்த வேண்டும். ரூ.5 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை 20 சதவீதம் வரியும், ரூ.10 லட்சத்துக்கு மேல் 30 சதவீத வரியும் கட்ட வேண்டும்.
பட்ஜெட் 2013-14 - SSA திட்டத்திற்கு ரூ.27,258 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.மற்றும் RMSA திட்டத்திற்கு, ரூ.3,983 கோடிகள் ஒதுக்க திட்டமிடப்பட்டுள்ளது
கல்விக்கென ஒதுக்கப்பட்டுள்ள நிதி விபரங்கள்
* மத்திய மனிதவளத் துறைக்கு, ரூ.65,867 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இது, முந்தைய ஆண்டைவிட, 17% அதிகம்.* சர்வ சிக்ஷா அபியான்(SSA) திட்டத்திற்கு ரூ.27,258 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
* மேலும், ராஷ்ட்ரிய மத்யமிக் சிக்ஷா அபியான்(RMSA) திட்டத்திற்கு, ரூ.3,983 கோடிகள் ஒதுக்க திட்டமிடப்பட்டுள்ளது. இது 26.6% கூடுதலாகும்.
2013-14 - ரூ.25 லட்சம் வரை வீட்டு கடன் வாங்கும் முதல் முறை கடனாளிகளுக்கு, அவர்களின் வீட்டு கடன் வட்டியிலிருந்து ஒரு லட்ச ரூபாய் தள்ளுபடி செய்யப்படும் அறிவிப்பு
2013-14 ஆம் ஆண்டுக்கான பொது பட்ஜெட் நாடாளுமன்றத்தில் நிதியமைச்சர் ப.சிதம்பரம் இன்று தாக்கல் செய்தார். அதில், 1.4.2013 தேதியிலிருந்து 31.3.2014 தேதிவரை வீட்டு கடனுக்காக விண்ணப்பிக்கும் முதல் முறை வீட்டு கடன் பெறும் நபர்களுக்கு,...
பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதும் மாணவர், மின்தடையின்றி தேர்வெழுத, தேர்வு மையங்கள் அமைந்துள்ள பள்ளிகளில் தடையில்லா மின்சாரம் வழங்க மின்வாரியம் திட்டமிட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் பிளஸ் 2 பொதுத்தேர்வு, நாளை துவங்கி, மார்ச், 27ம் தேதி வரை நடக்கிறது. தமிழகத்தில், 7 லட்சத்து, 91 ஆயிரத்து, 924 மாணவர்கள் தேர்வெழுதுகின்றனர். தமிழகம் மற்றும் புதுச்சேரியில், 2,020 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தேர்வு மையங்களில் மாணவருக்கு தேவையான குடிநீர், கழிவறை, மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை, அந்தந்த தேர்வு மையங்களின் முதன்மைக் கண்காணிப்பாளர்கள் மற்றும் கல்வித்துறை அதிகாரிகள் செய்துள்ளனர்.
பட்ஜெட் 2013 - 14 : பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள்
பட்ஜெட் 2013 - 14 : முக்கிய அம்சங்கள்
நாடாளுமன்றத்தில் 2013-14ம் நிதி ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் இன்று தாக்கல் செய்தார்.
வருமான வரிவிதிப்பில் மாற்றமில்லை; ரூ. 2000 சலுகை
* வருமான வரிவிதிப்பில் மாற்றமில்லை; அதேசமயம் ரூ. 2 முதல் 5 லட்சம் வரையிலான வருவாய்தாரர்களுக்கு, அவர்க்ளுக்கு வரி விதிப்பு தொகையில் ரூ. 2000 தள்ளுபடி
Wednesday, February 27, 2013
நாளை பிளஸ் 2 தேர்வு - தமிழ் வழியில் 5.59 லட்சம் பேர் எழுதுகின்றனர் : ஆங்கில வழியில் 30.40 சதவீத மாணவர் பங்கேற்பு
நாளை துவங்கும், பிளஸ் 2 பொதுத் தேர்வை, 69.60 சதவீத மாணவ, மாணவியர், தமிழ் வழியில் எழுதுகின்றனர். அதன்படி, 5.59 லட்சம் பேர், தமிழ்வழியில், தேர்வை எழுதுகின்றனர். 30.40 சதவீத மாணவ, மாணவியர் மட்டுமே, ஆங்கில வழியில், தேர்வை எழுதுகின்றனர்.
தேர்வில் முறைகேடுகளுக்கு துணைபோனால் பள்ளிகளின் அங்கீகாரம் ரத்து: அரசு எச்சரிக்கை
தேர்வில், முறைகேடுகளுக்கு உடந்தையாக, பள்ளி நிர்வாகங்கள் செயல்பட்டால், சம்பந்தபட்ட பள்ளிகளின் அங்கீகாரம் ரத்து செய்ய, நடவடிக்கை எடுக்கப்படும்,'' என, தேர்வுத்துறை இயக்குனர் வசுந்தரா எச்சரித்துள்ளார்.அவரது அறிவிப்பு: தேர்வு மையங்களில், தடையற்ற .....
தனியார் பள்ளிகளின் தரம் அடிப்படையில் "கிரேடு' வகை திட்டம் அறிவிப்பு
தனியார் பள்ளிகளின் ஒட்டுமொத்த தரத்தின் அடிப்படையில், "ஏ.பி.சி.டி.,' என, நான்கு வரையான, "கிரேடு' அங்கீகாரம் வழங்கப்படும் என, தனியார் பள்ளிகளுக்கான கட்டண நிர்ணயக்குழு அறிவித்துள்ளது.பள்ளிகள் அமைந்துள்ள இடத்தின் பரப்பளவு, அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு....
அரசு பள்ளிகளில், 6 முதல், 10ம் வகுப்பு வரை, கம்ப்யூட்டர் பாடத்தை அறிமுகப்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது.
இதற்கான, ஆரம்ப கட்ட பணிகள் நடந்து வருகின்றன. அரசு பள்ளிகளில், மேல்நிலை கல்வியில் தான், கம்ப்யூட்டர் சயின்ஸ் தனி பாடமாக கற்பிக்கப்படுகிறது. 6ம் வகுப்பு முதல், 10ம் வகுப்பு வரை, அறிவியல் பாடத்தில் கம்ப்யூட்டர் குறித்து, ஒரு யூனிட் பாடம் மட்டுமே இருக்கும்.
தமிழக அமைச்சரவையில் புதிய பள்ளி கல்வித்துறை அமைச்சராக டாக்டர் வைகை செல்வன், அமைச்சரவையில் சேர்த்து கொள்ளப்பட்டுள்ளார்.
டாக்டர் வைகை செல்வன் |
தமிழக அமைச்சரவையிலிருந்து மூன்று அமைச்சர்கள் நீக்கப்பட்டுள்ளனர் சுற்றுலாத்துறை அமைச்சர் கோகுல இந்திரா, பள்ளி கல்வித்துறை, சட்டம் மற்றும் சிறைத்துறை அமைச்சர் சிவபதி மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் வி.எஸ்., விஜய் ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்குபதில், டி.பி.பூனாட்சி, டாக்டர் வைகை செல்வன், கே.சி. வீரமணி ஆகியோர் அமைச்சரவையில் சேர்த்து கொள்ளப்பட்டுள்ளனர்.
கல்வி துறையில் எகிறும் செலவினம்: எதிர்பார்ப்புகளை நிறைவேறுமா?
மாநிலம் முழுவதும், 55 ஆயிரம் பள்ளிகள், 1.35 கோடி மாணவ, மாணவியர் உள்ளனர். இவர்களுக்கு, கல்வி கற்பிக்கும் பணியில், 5.5 லட்சம் ஆசிரியர்கள் இருக்கின்றனர். கல்வி தரத்தை மேம்படுத்துவதற்காக, ஆண்டுதோறும், பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு, ஜெட் வேகத்தில் எகிறி வருகிறது.
Private Schools Fee Determination Committee 2013-2014 - Enquiry Notice for Apr'13 and Grading of Schools
Private Schools Fee Determination Committee 2013-2014
Questionnaire, Fee Format and Enquiry Notice
அரசு பள்ளிகளில் மாணவர்களை சேர்க்க புதிய திட்டம்
தமிழகம் முழுவதும் உள்ள அரசு பள்ளிகளில், மாணவர்களை சேர்க்க கல்வித்துறை புதிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. தனியார் பள்ளிகளில் வழங்கப்படும் பாடத்திட்டங்களும், சலுகைகளும்...
முதுநிலை, இளநிலை பட்டப் படிப்பு பாடத் திட்டங்களை மாற்றியமைக்க ஆசிரியர் தேர்வு வாரியம் முடிவு
ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் நடத்தப்படும் போட்டித் தேர்வுகளுக்கான பாடத் திட்டங்களை மாற்றியமைப்பது குறித்து தீவிரமாக ஆலோசிக்கப்பட்டு வருகிறது.
Tuesday, February 26, 2013
அரசு நடுநிலைப் பள்ளிகளில், ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரை பயிலும்மாணவ, மாணவியருக்கு புதிய முறையில் அறிவியல் கற்பிப்பு
அரசு நடுநிலைப் பள்ளிகளில், ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவியர், அறிவியலை எளிதில் புரிந்து கொள்ளும் வகையிலும், அறிவியல் மீது, அவர்களுக்கு ஆர்வத்தை ஏற்படுத்தும் வகையிலும், புதுமையான திட்டத்தை, தொடக்க கல்வித் துறை செயல்படுத்தி வருகிறது...
Sunday, February 24, 2013
மொபைல் பிரீ - பெய்டு போன் இணைப்பு துண்டிப்புவிதிமுறையில், "டிராய்' அதிரடி அடுத்த மாதம், 22ம் தேதி முதல் அமலுக்கு வருகின்றன.
மொபைல் பிரீ - பெய்டு சந்தாதாரர்களின், பயன்பாட்டில் இல்லாத இணைப்புகளை, 20 ரூபாய்க்கு மேல் இருப்பில் இல்லை என்பதற்காக, துண்டிக்க கூடாது' என, டெலிகாம் ஆபரேட்டர்களுக்கு, "டிராய்' உத்தரவிட்டுள்ளது.
Saturday, February 23, 2013
Counselling Schedule & Date-Wise vacancy position VILLAGE ADMINISTRATIVE OFFICER IN THE TAMIL NADU MINISTERIAL SERVICE (Date of Written Examination:30.09.2012) COUNSELLING SCHEDULE - IV-PHASE
Click here to know Village Admn.Officer counselling schedule
(To be opened Shortly)
Village Administrative Officer | ||
|
||
CLCIK HERE Vacancy Statement at the end of 1st day in III Phase Counselling |
பள்ளிக்கல்வி துறையில் 117 தட்டச்சர் பணி நியமன கலந்தாய்வு, நா ளை மாவட்ட முதன் மைக் கல்வி அலுவலகங்களில் நடக்கிறது.
குரூப்-4 தேர்வு வழியாக, பள்ளிக்கல்வி துறைக்கு, 117 தட்டச்சர் பணியிடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. தேர்வு செய்யப்பட்டவர்களின் பட்டியல், பள்ளிக்கல்வி துறையிடம், தேர்வாணையம் வழங்கியதை அடுத்து, அவர்களுக்கான பணி நியமன கலந்தாய்வு, வரும், 25ம் தேதி, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகங்களில் நடக்கிறது.
ஆறே மாதத்தில் பி.எட்., பட்டம் : பெரியார் பல்கலை பட்டத்தை நிராகரித்தது T.R.B
சேலம் பெரியார் பல்கலையில், ஆறே மாதத்தில் வழங்கப்பட்ட பி.எட்., பட்டத்தை, டி.ஆர்.பி., செல்லாது என, அறிவித்து, வேலைவாய்ப்பை மறுத்ததால், அதிர்ச்சியடைந்த மாணவர்கள், நேற்று, பல்கலைக்கழகத்தை முற்றுகையிட்டனர்.கல்வியியல் சேலம் பெரியார் பல்கலையில், 2008ம்.....
Friday, February 22, 2013
"உங்கள் பள்ளியில் அமெரிக்கா': புதிய திட்டம் அறிமுகம்
உங்கள் பள்ளியில் அமெரிக்கா' என்ற திட்டத்தை, சென்னையில் உள்ள அமெரிக்க துணை தூதரகம், நேற்று துவங்கியது. இத்திட்டத்தின் மூலம், அமெரிக்க கலாச்சாரம், சமூகம், அரசியல், கல்வி ஆகியன குறித்து,.....
குரூப்-1 தேர்வுக்கான தற்காலிக விடைகள் வெளியீடு - Tentative Answer Keys
Sl.No.
|
Subject Name
|
Posts included in Grp-I Services (Preliminary Exam)
(Date of Examination:16.02.2013)
|
|
1
|
|
Note: Right
Answer has been tick marked in the respective choices for each question.
Representations if any shall be sent so as to reach the Commission's Office
within 7 days. Representations received after 26th February 2013 will receive no
attention.
|
நிர்வாக ஒதுக்கீட்டில் உயர்கல்வி படிக்கும் மாணவர்களுக்கு வங்கியில் கல்விக்கடன் வழங்க வேண்டும் மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவு
கோவையில் படிக்கும் மாணவி கல்விக்கடன் வேண்டி அருகில் உள்ள பாங்க் ஆப் இந்தியா கிளையில் விண்ணப்பித்திருந்தார். அவரின் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டுவிட்டது. அவர் நிர்வாக ஒதுக்கீட்டு பிரிவின் கீழ் உள்ளதால் கல்விக்கடன் வழங்க வங்கி மறுத்து விட்டது. கல்விக்கடன்...
Thursday, February 21, 2013
RMSA(ஆர்.எம்.எஸ்.ஏ) திட்ட அறிவியல் உபகரணங்கள்: தலைமை ஆசிரியர்களுக்கு நெருக்கடி
தமிழகத்தில், அனைவருக்கும் இடைநிலை கல்வி திட்டத்தில் (ஆர்.எம்.எஸ்.ஏ.,) ரூ.25 ஆயிரம் மதிப்புள்ள அறிவியல் உபகரணங்களை, குறிப்பிட்ட தனியார் நிறுவனங்களில் மட்டுமே வாங்க, தலைமையாசிரியர்கள் வற்புறுத்தப்படுவதாக புகார் எழுந்துள்ளது.
Wednesday, February 20, 2013
கல்விக் கட்டணம் நிர்ணயம்: ஐகோர்ட் புது வழிமுறை
கல்விக் கட்டணம் நிர்ணயிக்கும் போது, பள்ளிகளுக்கு ஆகும் செலவை, கல்விக் கட்டண நிர்ணயக் குழு, கருத்தில் கொள்ள வேண்டும்" என, சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
முதுகலை தமிழ்வழி படிப்பில் போலி சான்றிதழ்கள் : T.R.B தகவல்
முதுகலை, தமிழ்வழி படிப்பில், போலி சான்றிதழ்கள் சமர்ப்பிக்கப்பட்டு உள்ளதாக, ஆசிரியர் தேர்வு வாரியமான, டி.ஆர்.பி., பகீர் தகவலை வெளியிட்டுள்ளது. இதனால், தமிழ்வழி இட ஒதுக்கீட்டிற்கான தேர்வுப் பட்டியல் வெளியாவதில், சிக்கல் எழுந்துள்ளது.
மெட்ரிக் பள்ளிகள் இயக்குனர் மாற்றம்
மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குனர் பொறுப்பில் இருந்து, தேர்வுத்துறை இயக்குனர் வசுந்தராதேவி, விடுவிக்கப்பட்டார். பாடநூல் கழக செயலர் பிச்சையிடம், மெட்ரிக் இயக்குனர் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டுள்ளது.
Tuesday, February 19, 2013
கல்வி உரிமை சட்டம் நர்சரி பள்ளிகளுக்கு பொருந்தாது சுப்ரீம் கோர்ட் அதிரடி
கல்வி உரிமை சட்டம் நர்சரி பள்ளிகளுக்கு பொருந்தாது என சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது. நர்சரி பள்ளிகளை கல்வி உரிமை சட்டத்தில் சேர்க்க கோரி சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இதில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள கல்வி உரிமை சட்டம் நர்சரி பள்ளிகளுக்கு பொருந்தாது என கூறியுள்ளது. இந்த உத்தரவு தற்போது நடக்கும் மாணவர் சேர்க்கையை பாதிக்காது எனவும் கூறியுள்ளது.
Monday, February 18, 2013
தமிழகத்தில் உள்ள அரசு உயர்நிலை,மேல்நிலை பள்ளிகளில் அடிப்படை வசதிகள், ஆசிரியர், மாணவர்கள் விகிதம் குறித்து கணக்கெடுக்க, பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.
ஒவ்வொரு மாவட்டத்திலும், 6 முதல் பிளஸ் 2 வரை உள்ள அரசு பள்ளிகளில், முதன்மை கல்வி அலுவலரின் ஆலோசனையின் பேரில், மாவட்ட கல்வி அலுவலர்கள், நேர்முக உதவியாளர்கள், உள்ளிட்ட அதிகாரிகளின் கீழ் பல்வேறு குழுக்கள் அமைக்க வேண்டும்.
மாவட்ட கல்வி அலுவலர் (டி.இ.ஓ.,) பதவி உயர்வு "பேனல்': தத்தளிக்கும் தலைமையாசிரியர்கள்
மாநிலம் முழுவதும் மாவட்ட கல்வி அலுவலர் (டி.இ.ஓ.,) பதவி உயர்வு பேனலில் பெயர் இடம்பெற்றுள்ள தலைமையாசிரியர்கள், "ரகசிய அறிக்கை' (கான்பிடென்ஷியல் ரிப்போர்ட்) பெற உயர் அதிகாரிகளை தேடி அலையும் நிலை ஏற்பட்டுள்ளது.
"ஆன்-லைன்' வழியாக செய்முறை பயிற்சி: சி.பி.எஸ்.இ., பள்ளிகளில் அறிமுகம்
"சி.பி.எஸ்.இ., பள்ளிகளில், 9 மற்றும், 10ம் வகுப்பு மாணவ, மாணவியர், "ஆன்-லைன்' வழியில், அறிவியல் பாடத்தில், செய்முறை பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும்' என, அதன் தலைவர் வினீத் ஜோஷி அறிவுறுத்தி உள்ளார்.
அரசு பள்ளி வசதிகளை கணக்கெடுக்க கல்வித்துறை உத்தரவு
தமிழகத்தில் உள்ள அரசு உயர்நிலை,மேல்நிலை பள்ளிகளில் அடிப்படை வசதிகள், ஆசிரியர், மாணவர்கள் விகிதம் குறித்து கணக்கெடுக்க, பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.
Friday, February 15, 2013
குரூப்-2 தேர்வு முடிவு, மிக விரைவில் வெளியிடப்படும் .22ம் தேதி முதல் நேர்காணல்
"குரூப்-2 தேர்வு முடிவு, மிக விரைவில் வெளியிடப்படும்; இதற்கான நேர்காணல், 22ம் தேதி முதல், தேர்வாணையத்தில் நடக்கும்,' என, டி.என்.பி.எஸ்.சி., தலைவர், நடராஜ் தெரிவித்துள்ளார்.
சிறுபான்மை மொழிப் பாடங்களில் தேர்வு பெற்றவர் பட்டியல் டி.ஆர்.பி.(TRB), அலுவலக, அறிவிப்பு பலகையில் வெளியிடப்பட்டுள்ளது.
அறிவிப்பு: மலையாள வழியில், 12 பேர்; தெலுங்கு, 13; உருது, 9 பேர் என, 34 பேர், தேர்வு பெற்றுள்ளனர்.முதுகலை ஆசிரியரில், உருது வழியில் ஒருவரும்; தெலுங்கு வழியில் ஒருவரும் தேர்வு பெற்றுள்ளார். இவர்களின் தேர்வுப் பட்டியல், 18ம் தேதி, டி.ஆர்.பி., இணையதளத்தில் வெளியிடப்படும்.
பள்ளிகள் மீதான கட்டண புகார்களை விசாரிக்க, 32 மாவட்டங்களிலும், முதன்மைக் கல்வி அதிகாரிகள் தலைமையில், குழு அமைக்கப்பட்டுள்ளது
இக்குழு, ஒவ்வொரு மாதத்திலும், முதல் மற்றும் மூன்றாவது சனிக்கிழமை கூடி, பள்ளிகள் மீது வரும் புகார் குறித்து, விசாரணை நடத்தி, சம்பந்தபட்டதுறைகளுக்கு, பரிந்துரை அறிக்கையை அனுப்பும்.
ஆசிரியைகளை தரக்குறைவாகப் பேசிய பள்ளி பதிவு எழுத்தர் பணியிடை நீக்கம்
மதுரையில் பள்ளி ஆசிரியைகளை தரக்குறைவாகப் பேசிய பதிவு எழுத்தர் ஒருவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். மதுரை மாநகராட்சி சுந்தரராஜபுரம் மேல்நிலைப்பள்ளியில் பதிவு எழுத்தரகப் பணிபுரிபவர் வி.முத்து...
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை மேல்நிலைப் பள்ளிகளுக்கு, டி.ஆர்.பி., மூலம் தேர்வு செய்யப்பட்ட முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு கலந்தாய்வு
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை மேல்நிலைப் பள்ளிகளுக்கு, டி.ஆர்.பி., மூலம் தேர்வு செய்யப்பட்ட முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு, 20ம் தேதி, சென்னையில் கலந்தாய்வு நடக்கிறது.
பள்ளிக் கல்வி - அரசுத் தேர்வுகள் இயக்ககம் - மாற்றுத்திறனாளிகள் மற்றும் சிறைத் தேர்வர்கள் - புதிய பாடத்திட்டம் - அறிவியல் பாட செய்முறைத் தேர்வு - செய்முறைத் தேர்வு விலக்கு கோரும் தேர்வர்களின் சான்றிதழ்களில் Practical Exempted என பதிந்து வழங்குதல் -செய்முறைத் தேர்வு எழுதுவதிலிருந்து விலக்களித்தல் - அரசுத் தேர்வுகள் இயக்குநருக்கு அதிகாரம் அளித்தல் - ஆணை வெளியிடப்படுகிறது.
Tuesday, February 12, 2013
குறைந்தபட்ச நிலப் பரப்பளவு இல்லை: 1,500 பள்ளிகள் மூடப்படும்?
குறைந்தபட்ச நில அளவு இல்லாததன் காரணமாக, 1,500 பள்ளிகள், தொடர் அங்கீகாரம் இல்லாமல் இயங்கி வருகின்றன. இந்த விவகாரத்தில், ஜூன் மாதம் பள்ளிகள் துவங்கும் முன், ஒரு முடிவை எடுக்க வேண்டிய நிலையில் தமிழக அரசு உள்ளது.
Monday, February 11, 2013
அரசு பொதுத் தேர்வு மையங்களில் நிகழாண்டும் "ஜெனரேட்டர்' வைக்க உத்தரவு
அரசுப் பொதுத் தேர்வு மையங்களில் கடந்த ஆண்டு ஜெனரேட்டர் பயன்படுத்தியதற்கான செலவுத் தொகை வழங்கப்படாத நிலையில், இந்த ஆண்டும் ஜெனரேட்டர் வசதி செய்ய வேண்டும் என அந்தந்த மையங்களுக்கு அரசு தேர்வுத் துறை அறிவுறுத்தியுள்ளது.
Sunday, February 10, 2013
பாரதியார் பல்கலைக்கழகம் பி.எட் (B.Ed 2013) சேர்க்கைக்காண – Notification வெளியீடு
Click here to Download Prospectus
Click here to Download Application
LAST DATES: 28.02.2013 for submission of applications for School of Distance
Education B.Ed. , Programme
Education B.Ed. , Programme
Saturday, February 9, 2013
சமச்சீர் கல்வி முறை ராமேஸ்வரத்தில் மத்திய பிரதேச கல்வித்துறை அதிகாரிகள் முகாம்
ம.பி.,யில் சமச்சீர் கல்வியை அறிமுகப்படுத்துவதற்காக,
அம்மாநில கல்வித்துறை அதிகாரிகள் ராமேஸ்வரத்தில் முகாமிட்டு, முன்னாள்
ஜனாதிபதி அப்துல்காலம் படித்த, அரசு பள்ளியில் நடத்தப்படும் இக்கல்வி முறை
குறித்து கேட்டறிந்தனர்.
இளநிலை உதவியாளர் "கவுன்சிலிங்' நிறுத்தி வைப்பால் தவிப்பு
பள்ளிக்கல்வித்துறையில், இளநிலை உதவியாளர் பணியிடத்திற்கான "கவுன்சிலிங்' நிறுத்தப்பட்டதால், காத்திருப்பவர்கள் தவித்து வருகின்றனர். பள்ளிக்கல்வித்துறையில் காலிப்பணியிடங்களில், இளநிலை உதவியாளர்களை வாரிசு, கருணை அடிப்படையில் பணி நியமனம் செய்ய..
தமிழக அரசின் அனைத்து அலுவலகங்கள், அரசு நிறுவன அலுவலகங்கள், பள்ளிகளில் இணையதள வசதி செய்ய, அரசு நடவடிக்கை எடுத்துள்ளது
அனைத்து அரசு அலுவலகங்கள், பள்ளிகளுக்கு இணையதள வசதி* ரூ.50 கோடியில் திட்டம் நிறைவேற்றம் இதற்காக, ஒப்பந்த அடிப்படையில், தொலைத் தொடர்பு, "பிராட்பேண்ட்' இணைப்பை
பெற, எல்காட் நிறுவனம் டெண்டர் கோரியுள்ளது. 50 கோடி ரூபாய் மதிப்பிலான
இப்பணிகள், மூன்று மாதங்களில் முடிவடையும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
குரூப்-1 பணிகளுக்கான தேர்வில் கொண்டு வந்த மாற்றம் செல்லும்' என, சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
குரூப்-1 பணிகளுக்கான தேர்வில் கொண்டு வந்த மாற்றம்
செல்லும்' என, சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.கடந்த ஆண்டு, டிசம்பரில்,
குரூப்-1 பணிகளுக்கான அறிவிப்பாணையை, அரசுப் பணியாளர்கள் தேர்வாணையம் -
டி.என்.பி.எஸ்.சி., வெளியிட்டது.
ஒரே இணையதள முகவரி: மாணவர்கள் விவரம் பதிவதில் தாமதம்
மாநில அளவில் ஒரே இணையதள முகவரியை பயன்படுத்துவதால், மாணவர்களின் விவரம் பதியும் பணியில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது. அரசு, அரசு உதவி பெறும், தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகள் விவரங்களை உள்ளடக்கிய,
மாணவர்களுக்கு சுற்றுச்சூழல் கல்வி: கூடுதல் நிதி ஒதுக்கீடு
அரசு பள்ளி மாணவர்களுக்கு சுற்றுச்சூழல் கல்வியின் அவசியம் கருதி, இவ்வாண்டு தமிழக அரசு கூடுதல் நிதியை ஒதுக்கீடு செய்து உத்தரவிட்டுள்ளது.
Friday, February 8, 2013
Thursday, February 7, 2013
10ம் வகுப்பு வரையான பாட புத்தகங்கள் தட்டுப்பாடு : டி.இ.டி., தேர்வு எழுதுவோர் திண்டாட்டம்
பத்தாம் வகுப்பு வரையிலான பாடப் புத்தகங்கள் கிடைப்பதில், கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. ஓரிரு மாதங்களில், டி.இ.டி., தேர்வு நடைபெற இருப்பதால், தேர்வெழுதத் திட்டமிட்டுள்ள தேர்வர்கள், பாடப் புத்தகங்கள் கிடைக்காமல், திண்டாடி வருகின்றனர்.
பள்ளி கல்வித்துறையில் கருணை அடிப்படையில் பணி: நியமன உத்தரவு கிடைக்காமல் 900 பேர் காத்திருப்பு - தினமலர்
பள்ளி கல்வித்துறையில், கருணை அடிப்படையில் பணி பெற, 10 ஆண்டுகளுக்கும் மேலாக, 900 பேர் காத்திருப்போர் பட்டியலில் உள்ளனர். பணி ஒதுக்சடு செய்த, 541 பேர், பணி நியமன உத்தரவு கிடைக்காமல், பல மாதங்களாக தவித்து வருகின்றனர்.
10ம் வகுப்பு செய்முறைத் தேர்வு தேதி அறிவிப்பு
பத்தாம் வகுப்பு மாணவ, மாணவியருக்கான செய்முறைத் தேர்வை, இம்மாதம், 20ம் தேதி முதல், 28ம் தேதிக்குள் முடிக்க வேண்டும் என, தேர்வுத்துறை இயக்குனர் வசுந்தரா தேவி உத்தரவிட்டுள்ளார்.
Private Schools Fee Determination Committee 2013-2014 - Questionnaire and Format
Private Schools Fee Determination Committee 2013-2014
Questionnaire and Format
Wednesday, February 6, 2013
அரசு தொடக்கப் பள்ளிகளில், குறைந்து வரும் மாணவர் சேர்க்கையை அதிகரிக்கவும், தனியார் பள்ளிகளுக்கு இணையாக கல்வித்தரத்தை மேம்படுத்தவும், பள்ளி கல்வித்துறை நடவடிக்கை.
அரசு தொடக்கப் பள்ளிகளில், குறைந்து வரும் மாணவர் சேர்க்கையை அதிகரிக்கவும், தனியார் பள்ளிகளுக்கு இணையாக கல்வித்தரத்தை மேம்படுத்தவும், பள்ளி கல்வித்துறை சார்பில் அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதற்காக,
Tuesday, February 5, 2013
1 முதல் 5 வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு இன்னும் 7 நாட்களுக்குள் இலவச மெழுகு பென்சில், கலர் பென்சில்கள் வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது.
ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு இன்னும் 7 நாட்களுக்குள் இலவச மெழுகு பென்சில், கலர் பென்சில்கள் வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது.
பள்ளிகளில் பசுமைக்குழு அமைக்க ரூ.1.35 கோடி: அரசு உத்தரவு
தமிழகத்தில், சுற்றுச்சூழலை பாதுகாக்கும் விதமாக, 3,200 பள்ளிகளில், "பசுமை குழு"க்கள் அமைக்கவும், 1,000 பள்ளிகளில், மண், காற்று, நீர் ஆய்வுக்கான, உபகரணங்கள் வாங்கவும், 1.35 கோடி ரூபாய் ஒதுக்கி அரசு உத்தரவிட்டுள்ளது.
வேலைவாய்ப்பு பதிவு மூப்பு: புதுப்பிக்க தவறியவர்களுக்கு வாய்ப்பு
click here to RENEWAL கடந்த இரண்டு ஆண்டில் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் காலக் கெடுவிற்குள் புதுப்பிக்க தவறியவர்கள் வரும் 28ம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் புதுப்பிக்கலாம்
டி.என்.பி.எஸ்.சி குரூப் 1 இறுதிப்பட்டியல் வெளியீடு
2010-11-ம் ஆண்டு 131 பணியிடங்களுக்காக நடத்தப்பட்ட டி.என்.பி.எஸ்.சி
குரூப் 1 தேர்வில் வெற்றிபெற்றவர்களின் இறுதிப்பட்டியல் இன்று
வெளியிடப்பட்டது.
click here & get your RESULT
Monday, February 4, 2013
உயர்நிலை, மேல்நிலை பள்ளி ஆசிரியர்கள் பயிற்சி ரத்து
தேர்வு நேரத்தில், உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர்களுக்கு வழங்கப்பட இருந்த, அனைவருக்கும் இடைநிலைக் கல்வி பயிற்சிகள், ரத்து செய்யப்பட்டுள்ளன. மத்திய அரசின் நிதியுதவியுடன் செயல்படும், அனைவருக்கும் இடைநிலை கல்வித் திட்டத்தில்,...
பள்ளி மாணவர்களுக்காக நடமாடும் ஆலோசனை மையம்
தமிழகத்தில் பள்ளி மாணவர்களின் உளவியல் சார்ந்த பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் வகையில் நடமாடும் ஆலோசனை மையம், பள்ளிக் கல்வித்துறையின் சார்பில் எற்படுத்தப்படவுள்ளது.
தற்போது நடைபெற்று கொண்டிருக்கும் தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கான பயிற்சி ஒத்திவைப்பு
தற்போது நடைபெற்று கொண்டிருக்கும் தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கான பயிற்சி ஒத்திவைப்பு -தேதி பின்னர் அறிவிக்கப்படும் - விரைவில் SSA - இயக்குனரின் செயல்முறைகள்
Sunday, February 3, 2013
Counselling Schedule & Date-Wise vacancy position VILLAGE ADMINISTRATIVE OFFICER IN THE TAMIL NADU MINISTERIAL SERVICE (Date of Written Examination:30.09.2012) COUNSELLING SCHEDULE - III PHASE
Saturday, February 2, 2013
மாணவர் சேர்க்கை விவகாரம்:ஆசிரியர் கல்வி பல்கலை உத்தரவு ரத்து
"தர மதிப்பீட்டுச் சான்றிதழ் பெறாத, ஆசிரியர் கல்லூரிகள், பி.எட்., - எம்.எட்., படிப்பில் மாணவர்களைச் சேர்க்கக் கூடாது" என, ஆசிரியர் கல்வி பல்கலைக் கழகம் பிறப்பித்த உத்தரவை, சென்னை ஐகோர்ட் ரத்து செய்தது. ஆசிரியர் கல்விக்கான தேசிய கவுன்சில், 2009ம் ஆண்டு,
ஆசிரியர் நியமன தகுதி மதிப்பெண்: தளர்த்த கோரிய மனுக்கள் தள்ளுபடி
ஆசிரியர் பணி நியமனத்துக்கான தகுதி தேர்வில், தகுதி மதிப்பெண்ணை தளர்த்தக் கோரிய மனுக்களை, சென்னை ஐகோர்ட் தள்ளுபடி செய்தது. நிர்ணயிக்கப்பட்ட தகுதியை கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும்; அதை மீறி நடக்கும் நியமனங்கள் செல்லாது என கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
Friday, February 1, 2013
தொடக்கக் கல்வியில் மாணவர்கள் சேர்க்கை அதிகரிக்க சிறப்பு பயிற்சி
தொடக்கக்கல்வியில், மாணவர்களின் சேர்க்கையை அதிகரிக்க, தலைமை ஆசிரியர்களுக்கு 14 நாள் சிறப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது. தமிழகத்தில் தனியார் பள்ளிகளின் அதிகரிப்பால், அரசு தொடக்கக் கல்வித்துறையில் மாணவர்களின் சேர்க்கை குறைந்து வருவதாக,புள்ளி விவரம் தெரிவிக்கிறது.
ஜூன் மாதம், பள்ளி துவங்குவதற்கு முன், மூன்றாவது, டி.இ.டி., தேர்வை நடத்தி, அதன் வழியாக, 15 ஆயிரம் ஆசிரியர்களை, புதிதாக தேர்வு செய்ய, டி.ஆர்.பி., திட்டமிட்டுள்ளது.
இந்த ஆண்டு, ஜூன் மாதம், பள்ளி துவங்குவதற்கு முன், மூன்றாவது, டி.இ.டி., தேர்வை நடத்தி, அதன் வழியாக, 15 ஆயிரம் ஆசிரியர்களை, புதிதாக தேர்வு செய்ய, டி.ஆர்.பி., திட்டமிட்டுள்ளது.இவர்கள் அனைவரும், ஜூன் மாதம், பள்ளி துவங்கும் போது, பணியில் சேர வழி செய்யப்படும் என, கூறப்படுகிறது.கட்டாய கல்விச் சட்டத்தின் படி,
Subscribe to:
Posts (Atom)