போதிய ஆய்வக வசதிகள் இல்லாத பள்ளிகளுக்கும், இந்த உபகரணங்களை வாங்குவதால், அதை பயன்படுத்த முடியாமல், கடந்த ஆண்டுகளில் வாங்கிய உபகரணங்களே, அட்டை பெட்டிகளுக்குள் காட்சி பொருட்களாக முடங்கி கிடக்கும்போது இந்தாண்டும், அதே பொருட்களை வாங்கி, அதற்கான "பில்'லாக ரூ.25 ஆயிரத்தை காசோலையாக அனுப்ப வேண்டியுள்ளதாக, கவலை தெரிவிக்கின்றனர்.
தலைமையாசிரியர்கள் சிலர் கூறியதாவது: பள்ளிகளுக்கு என்ன வகை அடிப்படை வசதிகள் செய்ய வேண்டும் என்று, எங்களுக்கு தான் தெரியும். ஒவ்வொரு பள்ளியிலும், 3 ஆண்டுகளாக ஒரே மாதிரியான ஆய்வகப் பொருட்களையே வாங்க திட்ட அதிகாரிகள் வற்புறுத்துகின்றனர். இந்நிலையில், இந்தாண்டும் அதே பொருட்களை, குறிப்பிட்ட சில தனியார் நிறுவனங்களில் மட்டும் வாங்க, வற்புறுத்துகின்றனர். பொருட்கள் தரமானதாக இல்லை என்றால், எங்கள் மீது வீண் பழி போட்டு விடுவார்களோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது, என்றனர்.
அரசே கொள்முதல் செய்யலாம்...: இத்திட்டத்தில், ஒவ்வொரு பள்ளிக்கும் தலைமையாசிரியர் பெயர்களுக்கு மானிய தொகை அனுப்பப்பட்டு, அதன்பின், ஆய்வகப் பொருட்கள், நூல்கள் வாங்கி, அதற்கான செலவை தலைமை ஆசிரியர்களிடமிருந்து காசோலையாக தனியார் நிறுவனங்கள் பெறுகின்றன. இதற்கு பதில், பள்ளிகளுக்கு தேவையான ஆய்வக பொருட்கள் விவரங்களை பள்ளிகளிடமிருந்து முன்கூட்டியே அரசு பெற்று, அதற்கான பொருட்களை அரசே கொள்முதல் செய்து, பள்ளிகளுக்கு நேரடியாக வழங்கினால், "இடை கமிஷன்' பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்கலாம்.
No comments:
Post a Comment