அரசு பள்ளி மாணவர்களுக்கு சுற்றுச்சூழல் கல்வியின் அவசியம் கருதி, இவ்வாண்டு தமிழக அரசு கூடுதல் நிதியை ஒதுக்கீடு செய்து உத்தரவிட்டுள்ளது.
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், சுற்றுச்சூழல் கல்வியை கற்றுத்தர, சுற்றுச்சூழல் மன்றம், பசுமைப்படை இயக்கம் செயல்படுகிறது.
நீர், கழிவு, எரிவாயு சிக்கனம், பண்பாடு, கலாச்சாரம், உயிர் பண்மய மாக்கல் மேலாண்மை குறித்து, மாணவ, மாணவிகளுக்கு கற்றுத் தருவதன் மூலம் பள்ளி வளாகம் மட்டுமல்லாது, வெளி இடங்களிலும் சுற்றுப்புற சூழலை பேணி காப்பதுடன், மற்றவர்களுக்கும் உணர்த்தும் நோக்கில், இக்கல்விக்கு முக்கியத்துவம் அளித்து, நிதி ஒதுக்கப்படுகிறது.
கடந்த ஆண்டு வரை ஒவ்வொரு பள்ளிக்கும், ஆண்டுக்கு ரூ.1,250 வழங்கப்பட்டது. நடப்பு கல்வியாண்டு முதல், அதை ரூ.2,500 ஆக உயர்த்தி வழங்கி, அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்த நிதி மூலம் ஒவ்வொரு பள்ளியிலும் பெயர் பலகை வைத்தல், மரம் நடுதல், தளவாட சாமான்கள் வாங்குதல், களப்பணியின் போது, சிற்றுண்டிக்கு செலவிடுதல், பதிவேடு வாங்குதல், ஒருங்கிணைப்பாளர்களுக்கு ரூ.400 செலவிற்கு வழங்குதல் உட்பட 10 பணிகளுக்காக செலவிட உத்தரவிட்டுள்ளது.
No comments:
Post a Comment