கல்விக்கென ஒதுக்கப்பட்டுள்ள நிதி விபரங்கள்
* மத்திய மனிதவளத் துறைக்கு, ரூ.65,867 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இது, முந்தைய ஆண்டைவிட, 17% அதிகம்.* சர்வ சிக்ஷா அபியான்(SSA) திட்டத்திற்கு ரூ.27,258 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
* மேலும், ராஷ்ட்ரிய மத்யமிக் சிக்ஷா அபியான்(RMSA) திட்டத்திற்கு, ரூ.3,983 கோடிகள் ஒதுக்க திட்டமிடப்பட்டுள்ளது. இது 26.6% கூடுதலாகும். * மதிய உணவு திட்டத்திற்கு ரூ.13,215 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
* மருத்துவக் கல்வி, பயிற்சி மற்றும் ஆராய்ச்சிக்காக, ரூ.4,727 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
* மேலும், பொது வரிகளிலிருந்து, கல்விக்கு ஒதுக்கும் தொகை, 3% என்ற அளவிலேயே தொடர்ந்து நீடிக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
* நாளந்தா பல்கலைக்கழகத்தை புனர் நிர்மாணம் செய்யும் முயற்சிக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
* இதைத்தவிர, SC/ST, இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், சிறுபான்மையினர் ஆகிய பிரிவுகளைச் சேர்ந்த மாணவர்கள் மற்றும் மாணவிகள் ஆகியோருக்கு வழங்கப்படும் ஆயிரக்கணக்கான உதவித்தொகை திட்டங்கள் பற்றி மக்களவை உறுப்பினர்களுக்கு அறிவிக்கப்பட்டது.
No comments:
Post a Comment