ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை மேல்நிலைப் பள்ளிகளுக்கு, டி.ஆர்.பி., மூலம் தேர்வு செய்யப்பட்ட முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு, 20ம் தேதி, சென்னையில் கலந்தாய்வு நடக்கிறது.ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ், பல்வேறு மேல்நிலைப் பள்ளிகள் உள்ளன. இவற்றில், காலியாக உள்ள பணிகளுக்கு, ஆசிரியர் தேர்வு வாரியம் (டி.ஆர்.பி.,) மூலம் தேர்வு செய்யப்பட்டு, ஆதிதிராவிடர் நலத்துறைக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட, 70 முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு மட்டும், வரும், 20ம் தேதி கலந்தாய்வு நடக்கிறது.சேப்பாக்கத்தில் உள்ள, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை ஆணையர் அலுவலகத்தில், காலை, 11:00 மணிக்கு, கலந்தாய்வு நடக்கிறது. தேர்வு செய்யப்பட்ட முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள், உரிய சான்றுகளுடன் கலந்தாய்வில் பங்கேற்க வேண்டும் என, தமிழக அரசு தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment