மதுரையில் பள்ளி ஆசிரியைகளை தரக்குறைவாகப் பேசிய பதிவு எழுத்தர் ஒருவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். மதுரை மாநகராட்சி சுந்தரராஜபுரம் மேல்நிலைப்பள்ளியில் பதிவு எழுத்தரகப் பணிபுரிபவர் வி.முத்து... இவர் பள்ளியில் பணிபுரியும் சக ஆசிரியைகளை தகாத வார்த்தைகளால் பேசுவதாக மாநகராட்சி ஆணையர் நந்தகோபாலிடம் பாதிக்கப்பட்ட ஆசிரியைகள் புகார் தெரிவித்தனர்.
இப்புகாரின் பேரில், மாநகராட்சி கல்வி அதிகாரியின் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. அந்தக் கல்வி அதிகாரி விசாரணை அறிக்கையின் அடிப்படையில் பதிவு எழுத்தரை தற்காலிகப் பணிநீக்கம் செய்து ஆணையர் நந்தகோபால் உத்தரவிட்டார்.
No comments:
Post a Comment