தொடக்கக்கல்வியில், மாணவர்களின் சேர்க்கையை அதிகரிக்க, தலைமை ஆசிரியர்களுக்கு 14 நாள் சிறப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது. தமிழகத்தில் தனியார் பள்ளிகளின் அதிகரிப்பால், அரசு தொடக்கக் கல்வித்துறையில் மாணவர்களின் சேர்க்கை குறைந்து வருவதாக,புள்ளி விவரம் தெரிவிக்கிறது. நடப்புக் கல்வியாண்டில், அரசு தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் கல்வி தரத்தை உயர்த்தவும், மாணவர்கள் சேர்க்கையை அதிகரிக்கவும், பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. இதைத்தொடர்ந்து, அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், நிர்வாக ரீதியில் செயல்படும், தொடக்கக்கல்வித்துறை தலைமை ஆசிரியர்களுக்கு தரமான கல்வி, சேர்க்கையை அதிகரிப்பது குறித்த சிறப்பு பயிற்சி அளிக்கப்பட உள்ளது. ஒவ்வொரு மாவட்டத்திலும், குறிப்பிட்ட 5 இடங்களில், இப்பயிற்சி, பிப்.,4 முதல்18 வரை நடக்கிறது.
சி.இ.ஓ.,க்கள், டி.இ.ஓ.,க்கள் மற்றும் ஆசிரியர் பயிற்றுநர்கள், அரசின் புதிய உத்தரவு பற்றிய பயிற்சியை அளிக்க உள்ளதாக, அனைவருக்கும் கல்வி இயக்க, சி.இ.ஓ.,(சிவகங்கை) ஜெயலட்சுமி தெரிவித்தார்.
No comments:
Post a Comment