கல்வி சார்ந்த தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!
Friday, February 22, 2013
நிர்வாக ஒதுக்கீட்டில் உயர்கல்வி படிக்கும் மாணவர்களுக்கு வங்கியில் கல்விக்கடன் வழங்க வேண்டும் மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவு
கோவையில் படிக்கும் மாணவி கல்விக்கடன் வேண்டி அருகில் உள்ள பாங்க் ஆப் இந்தியா கிளையில் விண்ணப்பித்திருந்தார். அவரின் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டுவிட்டது. அவர் நிர்வாக ஒதுக்கீட்டு பிரிவின் கீழ் உள்ளதால் கல்விக்கடன் வழங்க வங்கி மறுத்து விட்டது. கல்விக்கடன்... வேண்டி மாணவி மதுரை உயர்நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு விசாரணைக்கு வந்தது. இறுதியில் மனுவை விசாரித்த நீதிபதி நிர்வாக ஒதுக்கீட்டில் சேர்ந்த மாணவர்களுக்கும் கல்விக்கடன் வழங்க வேண்டும் என தீர்பளித்து, சம்பந்தப்பட்ட மாணவிக்கு கல்விக்கடன் வழங்க உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று உத்தரவிட்டார்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment