தமிழகத்தில், சுற்றுச்சூழலை பாதுகாக்கும் விதமாக, 3,200 பள்ளிகளில், "பசுமை குழு"க்கள் அமைக்கவும், 1,000 பள்ளிகளில், மண், காற்று, நீர் ஆய்வுக்கான, உபகரணங்கள் வாங்கவும், 1.35 கோடி ரூபாய் ஒதுக்கி அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில், 1998ல், 170 பள்ளிகளில் முதல்கட்டமாக, பள்ளிப் பாடங்களுடன்,சுற்றுச்சூழல் கல்வியும் சேர்த்து மாணவர்களுக்கு போதிக்கப்பட்டன. தொடர்ந்து, 32 மாவட்டங்களில், 1,869 பசுமை குழுக்கள் அமைக்கப்பட்டு, அதில், தற்போது, 50 ஆயிரம் மாணவர்கள் உறுப்பினர்களாக உள்ளனர்.
இதன் மூலம், பள்ளி மாணவர்களுக்கு, சுற்றுச்சூழல் மற்றும் அதில் ஏற்படும் பாதிப்புகள் குறித்து கற்பிக்கப்படுகிறது. பசுமை திட்டங்களை, மாணவர்களை அழைத்துச் சென்று காட்டி, விளக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில், கடந்த ஆண்டு, மார்ச் மாதம், தமிழகத்தில் உள்ள, 32 மாவட்டங்களில், மாவட்டத்திற்கு, 100 பள்ளிகள் வீதம், 3,200 பள்ளிகளில், பசுமைக் குழுக்கள் அமைக்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டார்.
பள்ளிக் கல்வி இயக்குனர், தமிழகத்தில், 3,200 பள்ளிகளை தேர்வு செய்து, அரசிற்கு அறிக்கை சமர்ப்பித்தார். தொடர்ந்து, இப்பள்ளிகளில், குழுக்களை அமைப்பதற்கான பணிகளை துவக்க, 80 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment