கல்வி சார்ந்த தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!
Monday, February 4, 2013
உயர்நிலை, மேல்நிலை பள்ளி ஆசிரியர்கள் பயிற்சி ரத்து
தேர்வு நேரத்தில், உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர்களுக்கு வழங்கப்பட இருந்த, அனைவருக்கும் இடைநிலைக் கல்வி பயிற்சிகள், ரத்து செய்யப்பட்டுள்ளன. மத்திய அரசின் நிதியுதவியுடன் செயல்படும், அனைவருக்கும் இடைநிலை கல்வித் திட்டத்தில்,... 9 மற்றும் 10ம் வகுப்பு மாணவர்களின் கல்வித் தரம் மேம்பட, பல்வேறு திட்டங்கள் அமல்படுத்தப்படுகின்றன. நடப்பு கல்வியாண்டில், பாட வாரியாக, பிப்., 22ம் தேதி வரை, தொடர்ந்து பயிற்சி வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. தேர்வு நேரத்தில் ஆசிரியர்கள், தொடர்ந்து பயிற்சிக்கு சென்றால், இந்த இரண்டு வகுப்புகளின் தேர்வுக்கும், செய்முறைத் தேர்வுக்கும், மாணவர்கள் தயாராவதில் சிக்கல் ஏற்படும் என, புகார் எழுந்தது. இந்நிலையில், இம்மாதம் வழங்கப்படவிருந்த, அனைத்து பயிற்சிகளையும் ரத்து செய்து, இடைநிலைக் கல்வி இயக்குனர் உத்தரவிட்டுள்ளார். பயிற்சி நடைபெறும் நாள், பின்னர் அறிவிக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது. உயர் நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர்களுக்கு வழங்கப்பட இருந்த பயிற்சிகள் மட்டுமே, ரத்து செய்யப்பட்டுள்ளன. தலைமை ஆசிரியர்களுக்கான பயிற்சி, இயலா குழந்தைகளுக்கான பயிற்சி, கணிதப் பயிற்சி ஆகியவை, தொடர்ந்து நடத்தப்படுகின்றன. கல்வி அலுவலர் ஒருவர் கூறியதாவது: அரசு பள்ளிகளில், 10ம் வகுப்புக்கு பாடம் நடத்தும் ஆசிரியர்களுக்கு, வழங்கப்படவிருந்த பயிற்சிகள் அனைத்தும், ரத்து செய்யப்பட்டு விட்டன. திட்ட நிதி வீணாகக் கூடாது என்பதால், துவக்க மற்றும் நடுநிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கான பயிற்சிகள், தொடர்ந்து வழங்கப்படுகின்றன. இவ்வாறு அவர் கூறினார்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment