பள்ளிக்கல்வித்துறையில், இளநிலை உதவியாளர் பணியிடத்திற்கான "கவுன்சிலிங்' நிறுத்தப்பட்டதால், காத்திருப்பவர்கள் தவித்து வருகின்றனர். பள்ளிக்கல்வித்துறையில் காலிப்பணியிடங்களில், இளநிலை உதவியாளர்களை வாரிசு, கருணை அடிப்படையில் பணி நியமனம் செய்ய.. 2012 டிச.,10 ல் "கவுன்சிலிங்' அறிவிக்கப்பட்டிருந்தது. பின்னர், காரணம் அறிவிக்கப்படாமல் "கவுன்சிலிங்' நிறுத்தப்பட்டது. பள்ளிக்கல்வித்துறையோ, இதுகுறித்து எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை. இதனால், பணி நியமனத்திற்காக காத்திருந்தவர்கள், "கவுன்சிலிங்' நடக்கும் மறுதேதி குறிப்பிடாததால், பணி கிடைக்குமா, கிடைக்காதா, என தவிப்பில் உள்ளனர்.
No comments:
Post a Comment