அறிவிப்பு: மலையாள வழியில், 12 பேர்; தெலுங்கு, 13; உருது, 9 பேர் என, 34 பேர், தேர்வு பெற்றுள்ளனர்.முதுகலை ஆசிரியரில், உருது வழியில் ஒருவரும்; தெலுங்கு வழியில் ஒருவரும் தேர்வு பெற்றுள்ளார். இவர்களின் தேர்வுப் பட்டியல், 18ம் தேதி, டி.ஆர்.பி., இணையதளத்தில் வெளியிடப்படும்.இவ்வாறு டி.ஆர்.பி., அறிவித்துள்ளது.பட்டதாரி ஆசிரியரில், மேற்கண்ட நான்கு மொழிகளில், 92 பேர், டி.இ.டி., தேர்வில் தகுதி பெற்றிருந்தும், 34 பேருக்கு மட்டுமே, வேலை கிடைத்துள்ளது. 58 பேர், அவர்கள் சார்ந்த பாடங்களில் காலி பணியிடங்கள் இல்லாததாலும், குறிப்பிட்ட இன சுழற்சியில், தேர்வர் இல்லாததாலும், அவர்கள் தேர்வு செய்யப்படவில்லை என, டி.ஆர்.பி., வட்டாரங்கள் தெரிவித்தன.மலையாளத்தில், 57 பேர், தகுதி பெற்றிருந்தும், 12 பேர் மட்டுமே, இறுதியாக தேர்வு பெற்றனர். இவர்கள், கணிதம், இயற்பியல் உள்ளிட்ட பாடங்களுக்கு தேர்வு பெற்றுள்ளனர். மற்றவர்கள், மலையாள மொழிப் பாடத்தையே, பிரதானமாக எடுத்து படித்துள்ளனர். மொழிப் பாடத்தில், காலி பணியிடம் இல்லாததால், அவர்களுக்கு வேலை கிடைக்கவில்லை எனவும், துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
No comments:
Post a Comment