கல்வி சார்ந்த தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!
Tuesday, February 5, 2013
1 முதல் 5 வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு இன்னும் 7 நாட்களுக்குள் இலவச மெழுகு பென்சில், கலர் பென்சில்கள் வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது.
ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு இன்னும் 7 நாட்களுக்குள் இலவச மெழுகு பென்சில், கலர் பென்சில்கள் வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகம் முழுவதும் 1 முதல் 12ம் வகுப்பு வரை வகுப்பு நிலையை பொறுத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு இலவச பை, உபகரண பெட்டி, கலர் பென்சில், மெழுகு பென்சில், காலணி, சீருடை வழங்கப்படும் என்று கடந்த ஆண்டு முதல்வர் அறிவித்தார். இந்த கல்வியாண்டு முடிய இன்னும் 2 மாதங்களே உள்ள நிலையில் அரசு அறிவித்த இலவச பொருட்கள் கிடைக்குமா? என்ற எதிர்பார்ப்பில் மாணவர்கள் இருந்தனர்.
இந்நிலையில், அனைத்து மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர்களுக்கும் அரசு அனுப்பி உள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: முதல்கட்டமாக தொடக்கக் கல்வி மூலம் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 1 முதல் 2ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு மெழுகு பென்சிலும், 3 முதல் 5ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு கலர் பென்சில்களும் விரைவாக வழங்க வேண்டும். மாணவர்களின் எண்ணிக்கையை பொறுத்து மாவட்டங்களுக்கு பென்சில்கள் உடனே அனுப்பப்படும். அதை அடுத்த வார இறுதிக்குள் வழங்கி முடிக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment