தேர்வர்களுக்கான முக்கிய அறிவிப்புகள் : ஆசிரியர் கல்விக்கான தேசிய குழுவின் (என்.சி.டி.இ.,) அறிவிக்கை நாள், 23.8.2010க்குப் பின், அரசு மற்றும் தனியார் உட்பட அனைத்து வகை பள்ளிகளிலும், பணியில் சேர்ந்த இடைநிலை ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர் அனைவரும், டி.இ.டி., தேர்வை எழுதி தேர்ச்சி பெற வேண்டும்.இந்த தேதிக்குப் பின், பணி நியமனம் பெற்றிருந்தாலும், பணி நியமன நடவடிக்கைகள், மேற்கண்ட தேதிக்கு முன் துவங்கியிருந்தால், அவர்கள், டி.இ.டி., தேர்வை எழுத தேவையில்லை.
குறிப்பிட்ட தேதிக்குப் பின், பணி நியமன வேலைகள் துவங்கி, வேலையில் சேர்ந்திருந்தால், சம்பந்தப்பட்ட இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள், ஆர்.டி.இ., விதிப்படி, ஐந்து ஆண்டுகளுக்குள், டி.இ.டி., தேர்வில் தேர்ச்சி பெற்றாக வேண்டும்.
நடப்பு கல்வி ஆண்டில், ஆசிரியர் கல்வி பட்டய தேர்வு மற்றும் பட்டதாரி ஆசிரியர் தகுதிக்கான
இறுதி தேர்வை எழுதுபவர்களும், டி.இ.டி., தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்.
டி.இ.டி., தேர்வில், குறைந்தபட்சம், 60 சதவீதம் மற்றும் அதற்கும் அதிகமாக மதிப்பெண்கள் பெறும்
தேர்வர்கள் மட்டுமே, சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்படுவர்.
முதல் தாள் மற்றும் இரண்டாம் தாள் ஆகிய இரு தேர்வுகளிலும், 150 கேள்விகள் இடம் பெறும். தலா ஒரு மதிப்பெண் வீதம், 150 மதிப்பெண்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளன.
பூர்த்தி செய்த விண்ணப்பங்களை, "ஆன்-லைன்' வழியாகவோ, தபால் மூலமாகவோ, பேக்ஸ் மூலமாகவோ அனுப்பக் கூடாது. நேரடியாக அந்தந்த டி.இ.ஓ., அலுவலகங் களில் சமர்ப்பிக்க வேண்டும்.
ஏற்கனவே, டி.இ.டி., தேர்வு எழுதி, தேர்ச்சி பெற்றவர்கள், தங்களுடைய தகுதி மதிப்பெண்களை அதிகரித்துக் கொள்ள விரும்பினால், அவர்களும், ஆகஸ்ட் மாதத்தில் நடக்கும் தேர்வை எழுதலாம்.
No comments:
Post a Comment