கல்வி சார்ந்த தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!
Friday, May 10, 2013
ஒன்பதாம் வகுப்புக்கு இந்த ஆண்டு முதல், முப்பருவ கல்வி முறை அமல்படுத்தப்படுகிறது
மூன்று தொகுதிகளாக, புத்தகங்கள் வழங்கப்படும். மாணவர்களின் புத்தக சுமையை குறைக்கவும், கற்கும் திறனை அதிகப்படுத்தவும், இக்கல்வி முறை அமலாகிறது. எட்டாம் வகுப்பு வரை, முப்பருவ கல்வி முறையில் தமிழ், ஆங்கிலம் இணைத்து ஒரு புத்தகமாகவும்; கணிதம், அறிவியல், சமூக அறிவியல் அனைத்தும் ஒரு புத்தகமாகவும் வழங்கப்பட்டது. ஒன்பதாம் வகுப்புக்கு, தமிழ், ஆங்கிலம் ஒரு தொகுதியாகவும்; கணிதம் ஒரு தொகுதியாகவும்; அறிவியல், சமூக அறிவியல் ஒரு தொகுதியாகவும் வழங்கப்பட உள்ளன."அதிக பாடங்கள் இருப்பதால், புத்தகங்கள், மூன்று தொகுதிகளாக வழங்கப்படும்' என, கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment