ஆசிரியர் இடமாறுதல் கவுன்சிலிங்கில், பார்வையற்றோர், மாற்றுத்திறனாளி ஆசிரியர்களுக்கு முன்னுரிமை தர வேண்டும்,'' என, பள்ளிகல்வி செயலர் சபீதா உத்தரவிட்டுள்ளார்.தமிழகத்தில், அரசு, உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் தொடக்க, நடுநிலை, உயர், மேல்நிலை பள்ளி ஆசிரியர்களுக்கான இடமாறுதல் கவுன்சிலிங் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக, உயர், மேல்நிலைப்பள்ளிகளில் பணியாற்றும் முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் பணியிட மாறுதலுக்காக, தங்களது பதிவு மூப்பு விபரங்களை, சி.இ.ஓ., ஆபீஸ் மூலம், ஆன்-லைனில் பதிவு செய்து வருகின்றனர். இந்த பதிவும், இன்றுடன் முடிந்து விடும். தொடக்க, நடுநிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கு, மே 28 முதல் பணியிடமாறுதல் கவுன்சிலிங் அந்தந்த மாவட்டத்தில் நடைபெற உள்ளது.
முன்னுரிமை: கடந்த ஆண்டு வரை, ஆசிரியர் இடமாறுதல் செய்யும் போது, முன்னாள் ராணுவத்தினர் குடும்பத்திற்கு முதலில் முன்னுரிமை தரவேண்டும் என தெரிவிக்கப்பட்டது. ஆனால், இந்த ஆண்டு (2013-14) கவுன்சிலிங்கில், முற்றிலும் கண்பார்வையற்றவர்கள் , மாற்றுத்திறனாளி ஆசிரியர்களுக்கு தான் முதலில் முன்னுரிமை வழங்கவேண்டும். அதற்கு பின்னரே, முன்னாள் ராணுவத்தினர், பிற பிரிவினருக்கு முன்னுரிமை தரவேண்டும். மேலும், புகாரின் பேரில், ஆசிரியர்கள் பணியிட மாறுதல் செய்யப்படும் பட்சத்தில், அவர்களுக்கு முதலில் நிர்வாக காரணத்திற்கான இடமாறுதல் உத்தரவை வழங்க வேண்டும். பின்னர், அவர்கள் மீதுள்ள குற்றச்சாட்டுகளை விசாரித்து, புகாரின் மீது ஆதாரம் இருந்தால், அவர்கள் மீது உரிய ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். அதே நேரம், பணியிட மாறுதல் ஆவணத்தில், புகாரின் பேரில் ஆசிரியருக்கு மாறுதல் உத்தரவு வழங்கப்பட்டதாக குறிப்பிடவேண்டும். இது போன்ற ஆசிரியர்கள் குறித்து சி.இ.ஓ., அறிக்கைபடி, இயக்குனர் மாறுதல் செய்வார்.
சிறப்பு நிகழ்வாக, கணவன் அல்லது மனைவி திடீரென விபத்து அல்லது நோய்வாய்பட்டு இறக்கநேரிட்டால், அத்தகைய ஆசிரியர்களுக்கு, டிரான்ஸ்பர் கவுன்சிலிங் விதிமுறையை கடைபிடிக்காமல், நேரடியாக பணியிடமாறுதல் வழங்கலாம். இது குறித்து இயக்குனருக்கு அறிக்கை வழங்க வேண்டும். இது போன்று, ஆசிரியர் கவுன்சிலிங்கில் கடைபிடிக்குமாறு, பள்ளிக்கல்வி செயலர் சபீதா உத்தரவிட்டுள்ளார்.
No comments:
Post a Comment