பள்ளி கல்வித் துறையில், முதுகலை, தாவரவியல் ஆசிரியர், 196பேர், இளநிலை உதவியாளர்கள், 310பேர் பணி நியமன கலந்தாய்வு, நாளை (27ம்தேதி), "ஆன்-லைன்' மூலம், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகங்களில் நடக்கிறது.
கடந்த டிசம்பரில், 2,300க்கும் அதிகமான, முதுகலை ஆசிரியர்கள், பணி நியமனம் செய்யப்பட்டனர். அவர்களில், தாவரவியல் ஆசிரியர் மட்டும், வழக்கு காரணமாக, பணி நியமனம் செய்யப்படவில்லை. சென்னை, ஐ@கார்ட் உத்தரவுப்படி, மீண்டும் ஒரு முறை, அனைவருடைய சான்றிதழ்களும் சரிபார்க்கப்பட்டு, இறுதி பட்டியல் வெளியிடப்பட்டது. அதன்படி,தேர்வு செய்யப்பட்ட, 196, முதுகலை தாவரவியல் ஆசிரியர்களை, பணி நியமனம் செய்வதற்கான கலந்தாய்வு, நாளை, அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகங்களிலும், "ஆன்-லைன்' வழியில் நடக்கிறது.
இ@த@பால், டி.என்.பி.எஸ்.சி., மூலம், கல்வித்துறைக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட, 310, இளநிலை உதவியாளர்களை, பணி நியமனம் செய்வதற்கான கலந்தாய்வும், நாளை, முதன்மைக் கல்வி அலுவலகங்களில் நடக்கிறது. சம்பந்தபட்டவர்கள், நாளை காலை, 9:00 மணிக்கு, முதன்மைக் கல்வி அலுவலகங்களுக்கு சென்று, கலந்தாய்வில் கலந்துகொண்டு, பணி நியமன உத்தரவுகளை பெற்றுக்கொள்ளவேண்டும் என, பள்ளிக்கல்வி இயக்குனர்கேட்டுக் கொண்டுள்ளார். ஆசிரியர்தேர்வு வாரியம் மற்றும் டி.என்.பி.எஸ்.சி., அனுப்பியதேர்வுக் கடிதத்தை, கலந்தாய்வுக்கு எடுத்துச்செல்லவேண்டும் எனவும், இயக்குனர்கேட்டுக் கொண்டுள்ளார்.
No comments:
Post a Comment