கல்வி சார்ந்த தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!
Wednesday, May 29, 2013
2,881 முதுநிலை ஆசிரியர் பணி எழுத்து தேர்வு விண்ணப்பம் நாளை முதல் விநியோகம் - ஒரு பார்வை
தமிழகத்தில் முதுநிலை ஆசிரியர்கள் மற்றும் உடற்கல்வி இயக்குனர் நிலை 1 ஆகிய பணியிடங்களுக்கு 2,881 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதற்கான எழுத்து தேர்வு ஜூலை மாதம் 21ம் தேதி நடக்க உள்ளது. அதிகபட்சமாக தமிழ் ஆசிரியர் பணிக்கு 605 பேர் தேர்வு செய்யப்படுகின்றனர்.ஆங்கிலத்துக்கு 347 பேரும், கணிதத்துக்கு 288 பேரும், இயற்பியலுக்கு 228 பேரும், வேதியியலுக்கு 220 பேரும், தாவரவியலுக்கு 193 பேரும், விலங்கியலுக்கு 181 பேரும், வணிகவியலுக்கு 300 பேரும், வரலாறுக்கு 173 பேரும், பொருளாதாரத்துக்கு 257 பேரும், புவி யியலுக்கு 21 பேரும் தேர்வு செய்யப்பட உள்ளனர். உடற்கல்வி இயக்குன ருக்கு 17 பேரும், பயோ கெமிஸ்டிரி பாடத்துக்கு 16 பேரும், தெலுங்கு பாட ஆசிரியர் பணிக்கு 2 பேரும் அரசியல் அறிவியல் மற்றும் ஹோம் சயின்ஸ் பாடங்களுக்கு தலா ஒருவரும் தேர்வு செய்யப்படுகின்றனர்.இத்தேர்வுக்கான விண்ணப்பம் விநியோகம் நாளை (31ம் தேதி) முதல் வழங்கப்படுகிறது. தமிழகத்தில் உள்ள அனைத்து முதன்மைக் கல்வி அலுவலகங்களிலும் விண்ணப்பங்களை பெறலாம். விண்ணப்ப படிவம் மற்றும் குறிப்பேட்டின் விலை ஸீ50 ஆகும். விண்ணப்பத்தில் குறிப்பிட்டுள்ள அறிவுரையின்படி, எவ்வித தவறுமின்றி ஒஎம்ஆர் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து, குறிப்பிட்ட தேர்வு கட்டண சலானுடன் முதன்மை கல்வி அலுவலகத்தில் நேரில் சமர்ப்பித்து ஒப்புதல் பெற்றுக்கொள்ள வேண்டும்.பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை அஞ்சல் மூலமாக முதன்மைக் கல்வி அலுவலகத்துக்கோ அல்லது ஆசிரியர் தேர்வு வாரிய அலுவலகத்துக்கோ அனுப்ப கூடாது. அவ்வாறு அஞ்சல் மூலம் அனுப்பப்படும் விண்ணப்பங்கள் ஏற்று கொள்ளப்பட மாட்டாது. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை முதன்மைக் கல்வி அலுவலகங்களில் ஜூன் 14ம் தேதி மாலை 5.30 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment