கல்வி சார்ந்த தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!
Wednesday, May 22, 2013
பயிற்சி பெற்ற ஆசிரியர்களே பள்ளிகளில் பாடம் நடத்த வேண்டும் : சுப்ரீம் கோர்ட்
பயிற்சி பெற்ற ஆசிரியர்களை மட்டுமே, பள்ளிகளில் பாடம் நடத்த நியமிக்க வேண்டும்' என, சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. குஜராத் மாநிலத்தில் உள்ள ஆரம்ப பள்ளிகளில், தற்காலிக ஆசிரியர்களை நியமிப்பது தொடர்பாக, அம்மாநில அரசு, சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தது. இந்த மனு மீதான விசாரணை, நீதிபதிகள் பி.எஸ்.சவுகான், தீபக் மிஸ்ரா தலைமையிலான, "பெஞ்ச்' முன் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: முறையான கல்வி தகுதியில்லாதவர்களை, தற்காலிக ஆசிரியர்களாக நியமிப்பது, கல்வி முறையின் அடிப்படையையே பாழாக்கி விடும்; பயிற்சி பெற்ற ஆசிரியர்களை கொண்டே கல்வி கற்பிக்க வேண்டும். வழக்கமாக ஆசிரியர்கள் தேர்வு செய்யப்படும் நடைமுறை, அவர்களுக்கான சம்பளம் விகிதம் குறித்த விவரம் தரவேண்டும். குஜராத் அரசு மேற்கொள்ள உள்ள, தற்காலிக ஆசிரியர்கள் நியமனம் தொடர்பாக, அனைத்து விபரங்களையும் தாக்கல் செய்ய வேண்டும். இவ்வாறு, நீதிபதிகள் தங்கள் உத்தரவில் கூறினர்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment