கல்வி சார்ந்த தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!
Wednesday, May 22, 2013
திருப்பூர் மாவட்டத்தில், வரும் கல்வியாண்டு முதல், 97 துவக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில், ஆங்கில வழி பாடம் துவங்குகிறது
தமிழகம் முழுவதும் வரும் கல்வியாண்டு முதல், துவக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில், ஆங்கில வழி கல்வியை கட்டாயம் துவக்க வேண்டும் என பள்ளி கல்வித்துறை அறிவித்தது. திருப்பூர் மாவட்டத்தில் இருந்து 100 துவக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகள் அடங்கிய பட்டியல் தயார் செய்து, பள்ளி கல்வித்துறை இயக்குனரகத்துக்கு அனுப்பப்பட்டது. இதில், 97 பள்ளிகளில் ஆங்கில வழிக்கல்வியை துவங்க, அனுமதி கிடைத்துள்ளது.அவிநாசி ஒன்றியம் - 19 பள்ளிகள், ஊத்துக்குளி - 10, தாராபுரம் - 5, வெள்ளகோவில் - 6, காங்கயம் - 4, திருப்பூர் தெற்கு - 1, திருப்பூர் வடக்கு - 26, பல்லடம் - 1, உடுமலை - 9, பொங்கலூர் - 3, மடத்துக்குளம் - 6, குடிமங்கலம் - 6, மூலனூர் - 1 ஆகிய இடங்களில், ஆங்கில வழி பாடம் துவங்கப்படுகிறது. வரும் ஜூன் 3ல், பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில், மாவட்டத்தில் அனுமதிக்கப்பட்ட பள்ளி களில், ஆங்கில வழி கல்வியை துவங்க, கல்வித்துறை அதிகாரிகள் தீவிர நடவடிக்கையில் உள்ளனர்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment