கோடை விடுமுறைக்கு பிறகு ஜூன் 3ல் பள்ளிகள் துவங்குகின்றன. ஆண்டுதோறும் பள்ளி மாணவர்களுக்கு பஸ் "பாஸ்' வழங்குவது தாமதமாகிறது. சில பள்ளிகளில் ஒரு மாதம் வரை கூட "பாஸ்'வழங்காத நிலை கடந்த ஆண்டு இருந்தது.
இந்த கல்வியாண்டில் இதே நிலை நீடிக்காமல் இருக்க உத்தரவிடப்பட்டுள்ளது. ஆலோசனை: மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் தலைமையில் பள்ளிகள் துவங்குவதற்கு முன்னரே தலைமையாசிரியர்கள், போக்குவரத்து கழக அலுவலர்கள் பங்கேற்கும் கூட்டத்தை கூட்ட அரசு உத்தரவிடப்பட்டுள்ளது. பள்ளியில் மாணவர்களிடம் இருந்து போட்டோ சேகரித்து விண்ணப்பத்தில் ஒட்டி அனுப்ப தாமதம் ஏற்படுவதால், இம்முறை பள்ளியிலேயே பாஸ்போர்ட் அளவு போட்டோ எடுக்கப்படும். பள்ளி துவங்கும் நாள் அன்றே விண்ணப்பங்களை வழங்க போக்குவரத்து
கழகம் முடிவு செய்துள்ளது. இதன்படி, பள்ளி துவங்கிய சில நாட்களுக்குள், 6 முதல் பிளஸ் 2 மாணவர்களுக்கு இலவச பஸ் "பாஸ்' வழங்குவதற்கான ஏற்பாடுகள்
செய்யப்பட்டுள்ளன.
No comments:
Post a Comment