பேராசிரியர்கள் ஓய்வு பெறும் நாளிலேயே, ஓய்வூதிய பலன்கள் வழங்கும் புதிய திட்டத்தை, அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. அரசு உதவி பெறும் கல்லூரிகளில் பணியாற்றி ஓய்வு பெற்றபேராசிரியர்களுக்கான, ஓய்வூதிய பலன்கள் வழங்கும் விழா, சென்னை, புது கல்லூரியில்நேற்று நடந்தது. சென்னை மண்டலத்தில் உள்ள, 25 அரசு உதவி பெறும் கல்லூரிகளில் பணிபுரிந்த, 62பேராசிரியர்கள் இன்றுடன் ஓய்வு பெற உள்ளனர்.
இப்பராசிரியர்களுக்கு,சேமநல நிதி, ஓய்வூதியம் உள்ளிட்ட ஓய்வூதிய பலன்கள், ஓய்வு நாளிலேயே வழங்கும் புதிய திட்டத்தை, உயர்கல்வி துறை அறிமுகப்படுத்தி உள்ளது. இத்திட்டம் முதல் முறையாக சென்னை மண்டலத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டம் மூலம், ஓய்வு பெற்றபேராசிரியர்கள், தங்களின் ஓய்வூதிய பலன்களை பெறுவதற்காக அலைவது தவிர்க்கப்படுகிறது. விழாவில், உயர்கல்வி துறை அமைச்சர் பழனியப்பன், ஓய்வூதிய பலன்களை வழங்கினார்.
No comments:
Post a Comment