கல்வி சார்ந்த தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNSCHOOLS என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNSCHOOLS (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNSCHOOLS என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக கல்வித் துறையின் தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • Saturday, May 11, 2013

    பிளஸ் 2 மாணவர்கள் விடைத்தாள் நகல் பெற இ,மெயில் அனுப்பலாம்

    அரசுத் தேர்வுகள் இயக்ககம் நேற்று வெளியிட்ட அறிக்கை: பிளஸ் 2 தேர்வுகள் எழுதிய மாணவர்கள் தேர்வு எழுதிய எந்த பாடத்திற்கும் விடைத்தாள் நகல் மற்றும் மறுகூட்டலுக்கு

     மறுகூட்டலுக்கு பதிவு செய்ய இங்கே click here 

    என்ற இணையதளத்தில் ஆன்,லைனில் விண்ணப்பித்தல் தொடர்பாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. 


    மேலும், இதே இணையதளத்திலும் மாணவர்களுக்கான அறிவுரைகள் கொடுக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் ஆன், லைனில் விண்ணப்பிக்கும்போது, தங்களது விவரங்களை பூர்த்தி செய்தபின்னர் பத்து இலக்கம் கொண்ட விண்ணப்ப எண்ணுடன் கூடிய ஒப்புகைச் சீட்டை தவறாமல் பதிவிறக்கம் செய்து கொள்ள அறிவுரை வழங்கப்பட்டது. ஒப்புகைச் சீட்டில் உள்ள 10 இலக்க எண்ணை குறித்து கொள்ள தவறியதாலோ வேறு ஏதேனும் காரணங்களினாலோ வங்கியில் கட்டணம் செலுத்துவதற்குரிய சலானை பதிவிறக்கம் செய்ய இயலாதவர்கள், பதிவு எண், பிறந்த தேதி, பாடம், விண்ணப்பிக்கும் விடைத்தாள், மாணவர் பெயர், முகவரி, செல்போன் எண், இமெயில் முகவரி உள்ளிட்ட தகவல்களை dgehelpline@gmail.com எனும் இமெயிலில் அனுப்பி தாங்கள் ஆன்,லைனில் பூர்த்தி செய்த பாடத்திற்கான 10 இலக்க விண்ணப்ப எண்ணை பெற்றுக் கொள்ளலாம். மேலும், 044,28203089, 044,28221734 என்ற எண்களுக்கு பேக்ஸ் அனுப்பியும் பெறலாம். 044,28278286, 044,28264513 என்ற தொலைபேசி எண்களுக்கு காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை தொடர்பு கொண்டு தகவல்களை பெறலாம். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

    No comments:

    Post a Comment