கல்வி சார்ந்த தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNSCHOOLS என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNSCHOOLS (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNSCHOOLS என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக கல்வித் துறையின் தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • Sunday, May 12, 2013

    2013-2014ம் கல்வியாண்டில் அரசு/ நகராட்சி/ மாநகராட்சி உயர்நிலை /மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரிந்து வரும் ஆசிரியர்களுக்கு பொது மாறுதல் ONLINE மூலமாக நடத்தப்படுகிறது. உரிய விண்ணப்ப படிவத்தை அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரிடம் நேரிடையாக 14.05.2013 முதல் 18.05.2013 முடிய ஒப்படைக்க வேண்டும்.

    தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள், சென்னை-600 006. ந.க.எண் 183 /ஏ1/இ2/2013 நாள்:11.05.2013 ன் படி பள்ளிக்கல்வித்துறை  2013-2014ம் கல்வியாண்டில் பொதுமாறுதலுக்கான விண்ணப்பங்கள் பெறுதல் சார்ந்தான அறிவுரை கிழ்கண்டவாறு வழங்கப்பட்டுள்ளது.

      *2013-2014ம் கல்வியாண்டில் அரசு/ நகராட்சி/ மாநகராட்சி உயர்நிலை /மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரிந்து வரும் ஆசிரியர்களுக்கு 2013-2014ம் கல்வியாண்டில் பொது மாறுதல் இணைய தளத்தின் மூலமாக வழங்க வேண்டும்.

    *2013-2014ம் கல்வியாண்டின் பொதுமாறுதலுக்கான அரசாணை (1டி) எண். 129 பள்ளிக் கல்வி (இ1) துறை நாள்:09 .05.2013 வெளியிடப்பட்டுள்ளது.



     * ஆசிரியர் மீது தமிழ்நாடு குடிமைப்பணி (ஒழுங்குமுறை மற்றும் மேல்முறையீடு) விதிகள் 17 (a), 17 (b),ன் கீழ் ஏதேனும் ஒழுங்கு நடவடிக்கை நிலுவையில் உள்ளதா என்பதையும், நீண்டகால விடுப்பில் உள்ளவராயின் அதன் விவரம், தற்காலிகப் பணிநீக்கத்தில் உள்ளவராயின் அதன் விவரம், ஒழுங்கு நடவடிக்கைக்குட்படுத்தப்பட்டவராயின் அதன் விவரம், நிர்வாக நலன் கருதி மாறுதல் அளிக்கப்பட்டிருப்பின் அதன் விவரம் போன்ற விவரங்களைத் தெளிவாக அதற்கென ஒதுக்கப்பட்டுள்ள கலத்தில் தலைமையாசிரியரால் குறிப்பிடப்பட வேண்டும்.

    * மாவட்டத்திற்குள்/மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல் கோரும் தலைமையாசிரியர்கள் உரிய விண்ணப்ப படிவத்தில் சார்ந்த விவரங்களை சரியாக பூர்த்தி செய்து அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரிடம் நேரிடையாக 14.05.2013 முதல் 18.05.2013 முடிய ஒப்படைக்க வேண்டும்.

    * முதன்மைக் கல்வி அலுவலர்கள் மேற்காண் மாறுதல் விண்ணப்பங்களை இணைய தளத்தில் விண்ணப்பதாரர்/அவர்கள் பிரதிநிதி முன்னிலையில் பதிவு செய்திட வேண்டும். இணைய தளத்தில் பதிவு செய்த பின் பதிவு செய்த விவரங்கள் சரியாக உள்ளது என்பதை விண்ணப்பதாரர்/அவர்கள் பிரதிநிதியிடம் உறுதி செய்து கொள்ள வேண்டும். அதன் பின்னர் அவர்களது விண்ணப்பத்தினை இருநகல்கள் எடுத்து விண்ணப்பதாரர்/அவர்கள் பிரதிநிதியிடம் கையொப்பம் பெற்று ஒரு நகல் முதன்மைக் கல்வி அலுவலர் கோப்பில் பராமரிக்க வேண்டும். மற்றொரு நகலினை விண்ணப்பதாரருக்கு வழங்க வேண்டும்.

    * மாவட்டத்திற்குள் /மாவட்டம் விட்டு மாறுதல் கோரும் அனைத்துவகை ஆசிரியர்கள், உரிய விண்ணப்ப படிவத்தில் சார்ந்த விவரங்களை அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்களிடம் சமர்ப்பித்து மேலொப்பம் பெற வேண்டும். பொது மாறுதல் கோரும் விண்ணப்பப் படிவத்தில் உள்ள அனைத்து கலங்களும் சரியாக பூர்த்தி செய்யப்பட்டுள்ளனவா என ஆய்வு செய்து தலைமையாசிரியரால் ஒப்பமிடப்பட வேண்டும். சரியாக பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை மாறுதல் கோரும் ஆசிரியர்கள் அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரிடம் நேரிடையாக 14.05.2013 முதல் 18.05.2013 முடிய ஒப்படைக்க வேண்டும்.

    * முதன்மைக் கல்வி அலுவலர்கள் மேற்காண் மாறுதல் விண்ணப்பங்களை இணைய தளத்தில் விண்ணப்பதாரர்/அவர்கள் பிரதிநிதி முன்னிலையில் பதிவு செய்திட வேண்டும். இணைய தளத்தில் பதிவு செய்த பின் பதிவு செய்த விவரங்கள் சரியாக உள்ளது என்பதை விண்ணப்பதாரர்/அவர்கள் பிரதிநிதியிடம் உறுதி செய்து கொள்ள வேண்டும். அதன் பின்னர் அவர்களது விண்ணப்பத்தினை இருநகல்கள் எடுத்து விண்ணப்பதாரர்/அவர்கள் பிரதிநிதியிடம் கையொப்பம் பெற்று ஒரு நகல் முதன்மைக் கல்வி அலுவலர் கோப்பில் பராமரிக்க வேண்டும். மற்றொரு நகலினை விண்ணப்பதாரருக்கு வழங்க வேண்டும். 


    * மாறுதல் கோரும் விண்ணப்பங்களை இணைய தளத்தில் பதிவு செய்யும் போது இணையத் தளத்தில் ஏற்கனவே உள்ள பள்ளி முகவரியை மாற்றாமல் தட்டச்சு செய்திட வேண்டும். புதிதாக திருத்தங்கள் ஏதும் செய்தல் கூடாது. 


    * முதன்மைக் கல்வி அலுவலக பிரிவு உதவியாளர் விண்ணப்பங்களை பதிவு செய்த அன்றே தகுதியுள்ள விண்ணப்பம் / தகுதியில்லா விண்ணப்பம், நிராகரிக்கப்பட வேண்டியது என வகைப்படுத்தி A மற்றும் B பதிவேடுகள் தயார் செய்து அவற்றைப் பதிந்து முதன்மைக் கல்வி அலுவலரின் ஒப்பம் பெற்று பராமரிக்க வேண்டும்.


    * மேற்படி மாறுதல் விண்ணப்பங்களில் மாவட்டத்திற்குள் மாறுதல் கோருபவர்களின் விண்ணப்பங்களை, தனியாகவும், மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல் கோருபவர்களின் விண்ணப்பங்களை இணைய தளத்தில் தனியாக தொகுத்து பதிவு செய்ய வேண்டும்.


     * ஒவ்வொரு ஆசிரியர் /தலைமை ஆசிரியர் மாறுதல் கோரும் விண்ணப்பத்திற்கு தனித்தனியாக எண் வழங்கப்பட வேண்டும். மாறுதல் வழங்கும் நாளன்று இணையதள பதிவு நகலுடன் முதன்மைக் கல்வி அலுவலகத்திற்கு காலை 9.00 மணிக்கு வருகை புரிய வேண்டும். 

    *உள்ளூர் மாவட்டங்களில் பணி மாறுதல் கோரியவர்களுக்கான கவுன்சிலிங் முடிந்தவுடன் வெளி மாவட்டங்களுக்கு மாறுதல் கோரியுள்ளவர்களுக்கு மாறுதலுக்கான கவுன்சிலிங் தொடங்கப்படும். எனவே, சார்ந்த தலைமையாசிரியர்கள் உரிய தகவல்களை அந்தந்த முதன்மைக் கல்வி அலுவலரிடம் பெற்றுக் கொள்ள வேண்டும்.


    Email ThisBlogThis!Share to TwitterShare to Facebook

    No comments:

    Post a Comment