பள்ளி திறக்கும் நாளில் மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா பாடப்புத்தகங்களை வழங்க தமிழக அரசு உத்தரவிட்டது. ஏற்கனவே பெறப்பட்ட மாணவர்களின் பட்டியல் அடிப்படையில், தமிழ் நாடு பாடநூல் கழகத்தில் இருந்து அந்தந்த மாவட்டங்களுக்கு பாடப்புத்தகங்கள் அனுப்பப்பட்டு, பள்ளிகளுக்கு விநியோகிக்கப்பட்டு வருகின்றன.
இதுதொடர்பாக பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் தேவராஜன் அனுப்பியுள்ள உத்தரவு: முதன் மை கல்வி அலுவலர்கள், மாவட்ட கல்வி அலுவலர்கள் விலையில்லா பாடப்புத்தகங்கள் விநியோகிக் கும் பணியை முக்கியத்துவம் வாய்ந்த பணியாக கருத வேண்டும். பள்ளிவாரியாக பாடபுத்தகங் களை தலைமை ஆசிரியர்களிடம் இருந்து வாங்கிக் கொள்ள வேண்டும். அதனடிப்படையில் விநியோக மையங்களில் பாடநூல் கழகத்தால் அனுப்பப்பட்ட புத்தகங்களை பாட வாரியாக, வகுப்பு வாரியாக, மொழிவாரியாக ஒத்திசைவு செய்யப்பட வேண்டும். தொடர்ந்து பள்ளிகளுக்கு சென்று தங்க ளிடம் உள்ள விவரங்களின்படி, மாணவ, மாணவிகளுக்கு புத்தகங்கள் வழங்கப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்ய வேண்டும். பள்ளிகளுக்கு பாடப்புத்தகங்கள் துரிதமாக செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். தினசரி அறிக்கையை இயக்குநரகத்துக்கு தெரிவிக்க வேண்டும். பாடப்புத்தகங்கள் வழங்குவதில் ஏதேனும் காலதாமதம் ஏற்பட்டாலோ அல்லது சரியான பாடப்புத்தக தேவை விவரம் அளிக்காத தலைமை ஆசிரியர், மாவட்ட கல்வி அலுவலர், முதன்மை கல்வி அலுவலர் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
No comments:
Post a Comment