ஆசிரியர் தகுதித்தேர்வுக்கான விண்ணப்பங்கள், அரசு மேல்நிலைப்பள்ளிகளில், ஜூன் 17 ல் விற்பனை செய்யப்பட உள்ளது. தமிழகத்தில் கட்டாய கல்வி சட்டம் அமல்படுத்தப்பட்ட பின், ஆசிரியர்கள் பணி நியமனத்தின் போது, தகுதி தேர்வில் வெற்றி பெற வேண்டும் என்ற நிபந்தனை விதிக்கப்பட்டது. 2010 ஆக., முதல் பணியில் சேர்ந்த ஆசிரியர்களும், தகுதி தேர்வு எழுத வேண்டும் என, அரசு உத்தரவிட்டது. இரு தகுதி தேர்வுகள் நடத்தப்பட்டுள்ளது.
பல ஆசிரியர்கள் பணியில் இருந்தும், தகுதி தேர்வில் தேர்ச்சியடையவில்லை.இதை தொடர்ந்து, மூன்றாவது முறையாக ஆசிரியர் தகுதி தேர்வு நடத்தப்பட உள்ளது. இதற்கான விண்ணப்பங்கள்,கடந்த முறை மாவட்ட கல்வி அலுவலகங்களில் விற்பனை செய்யப்பட்ட நிலையில், தற்போது அரசு மேல்நிலைப் பள்ளிகளில், ஜூன் 17 முதல் விற்பனை செய்யப்பட உள்ளன.
பூர்த்தி செய்த விண்ணப்பங்களை, அதே பள்ளிகளிலே வழங்கலாம். விண்ணப்பங்கள் விற்பனை செய்யவும், பூர்த்தி செய்த விண்ணப்பங்களை பெறுவது குறித்து , அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு, பயிற்சி வழங்கப்படவுள்ளது. விண்ணப்பத்தின் விலை 50 ரூபாய்.
No comments:
Post a Comment